Tuesday, November 17, 2009
Thursday, October 22, 2009
நீர் நீரா ?
Thursday, January 22, 2009
ஏய் தமிழனே !! விழித்தெழு !!
அரசியல் கட்சிகளோ ஈழப் பிர்ச்சனையை வைத்து ஆதாயம் தேடுகிறார்கள், காங்கிரசும், இன்னும் சிலரும் விடுதலைப் புலிகளை காரணம் காட்டி ஈழத்தமிழர்களுக்காக நாம் போராடக் கூடாது என்கிறார்கள். மக்களில் பலர், இந்தப் பிர்ச்சனையப் பற்றி முழு புரிதல் இல்லாமலோ, முழு விவரம் தெரியாமலோ, வெறுமனே பரிதாபப் பட்டு விட்டு போகின்றனர். இன்னும் சிலர், இதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருக்கின்றனர்.
விடுதலைப் புலிகள் நம் பிரதமரைக் கொன்றார்கள் என்பதற்காக, அவர்களை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு இலங்கை ராணுவத்திற்கு ஆயுத உதவியை நம் இந்திய அரசு செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒரு நாட்டின் மக்களை அழிப்பதற்கு ராணுவ உதவி செய்து விட்டு, பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுக்கு இந்திய அப்பாவி மக்களை கொல்ல உதவி செய்கிறது என்று ஒப்பாரி வைப்பது எந்த வகையி சேர்த்தி என்றும் புரிய வில்லை...
35 ஆண்டுகளுக்கு முன்னால் 9 அறப்போராட்டவாதிகள் கொல்லப்படவில்லையெனில் இத்தனை ஆயுதபோராளிகள் தோன்றபோவதில்லை. அவர்களை அழிக்க இன்று தங்கள் உயிரையும் அழித்துகொள்ள தேவையில்லை. உங்களை குற்றம் சொல்லி ஒரு சொல் சொன்னாலே பதில் சொல்ல மனது துடிக்கும் போது தமிழனாய் பிறந்த ஒரு காரணத்திற்காக உயிரை இழைக்கும் தருணம் ஏற்படும் போது திருப்பி அடிக்க நினைப்பது மனித குணம் தானே!
எத்தனை முறை சுட்டாலும் உயிர்வருமாயின் எத்தனை முறை கற்பழித்தாலும் களங்கம் ஏற்படாதாயின் எத்தனை முறை நம் கை கால் உடல் என சதைப்பிண்டங்களாய் மாறினாலும் திரும்ப ஒட்டிக்கொள்ளுமாயின் இங்கே எவரும் ஆயுதம் எடுத்து போராட வந்திருக்க மாட்டார்கள் ...பந்தலடியில் நின்று அமைதியாகவே போராடியிருப்பார்கள்.இங்கெல்லாம் வெடிசத்தம் தீபாவளியின் அறிகுறியாய் மகிழ்ச்சி தர அங்கோ வெடிசத்தம் உயிரை பறிக்கும் கொடியதாகவே இருக்கிறது!
புலிகளோ அல்லது மற்ற ஆயுதம் தாங்கிய குழுக்களோ இல்லாமல் இருந்திருந்தால் எப்போதோ அங்கிருக்கும் தமிழினம் அழிக்கப்பட்டு இருந்திருக்கும்... அதையும் இங்கிருக்கும் தமிழர்களாகியா நாம் கைகட்டி கண்ணீர் சிந்தி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்திருப்போம்... இது தான் உண்மை... இதை மறுக்க முடியாது செர்மனியில் யூதர்களுக்கு என்ன நடந்ததோ அதுதான் இலங்கையிலும் நடக்கிறது...
பாதிக்கப்பவனுக்குத்தான் அதன் வலி புரியும்... சில மைல் தூரத்தில் இருந்து வேடிக்கைபார்க்கும் நமக்கு உயிரின் வலி புரியாது. தினமும் மரண பயத்தில் இருந்து பார்த்தால் புரியும், உறவுகள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டால் அதன் வலி புரியும் நமக்கு...
என்னுடைய அரசாங்கம் தவறாக நடந்துகொள்கிறது, தவறாக வழிநடத்தப்படுகிறது என்றால் அதை தட்டிக்கேட்கும் பொறுப்பு குடிமக்களாகிய நமக்கு இருக்கிறது. ஈழ விவகாரத்தில் அரசு எடுக்கும் அத்தனை முயற்சிகளும் தவறானவை. என் சட்டம் சொல்கிறது என்று எல்லாவற்றிற்கும் தலையாட்ட முடியாது.
இந்தியாவின் வல்லரசு கனவிற்கு தமிழன் தான் பலியா ?? ஏழு கோடி தமிழனின் ஓலக்குரல் தேசத்தின் முதல்வருக்கு உரைக்காவிட்டால் அத்தேசத்தில் ஒரு அங்கமாயிருப்பதில் எவ்வாறு பெருமை கொள்ள முடியும் ?? தேசத்தின் எல்லைகோடுகள் நிரந்தரமானவை அல்ல அம்மக்களின் உணர்வுகள் மதிக்கப்படாவிட்டால் !!
Saturday, November 8, 2008
ஈழம் தமிழனின் பிறப்புரிமை
மேல உள்ள படத்தை பாருங்கள். இப்படித்தான் முந்தைய உலகம் இருந்தது.இதை மறுப்பதற்கு போதிய ஆதாரம் இல்லாததால் இதுதான் உண்மை என்று கொள்ள வேண்டும் . இலங்கை என்பது பழைய கடற்கோளால் மூழ்கிப் போன குமரிக் கண்டத்தின் ஓர் எஞ்சிய பகுதி. இந்தக் குமரிக் கண்டம் தான் மூத்த குடியான ஆதித்தமிழன் பிறந்த பூர்வீக பூமி.குமரிக் கண்டம் கடற்கோளில் மூழ்கிப் போனதற்கு இலக்கியச் சான்றுகள் நமது தமிழ் இலக்கியத்தில் பல்வேறு இடத்தில் காணப்படுகின்றன."வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறு நல்லுகம்"
- தொல்காப்பியம்
செந்நீர்ப் பசும்பொன் உயிரியர்க் கீந்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர் பஃறுளி மணலினும் பலவே
- புறநூனூறு
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
- சிலப்பதிகாரம்
மேலும் இத்தீவில் உள்ள தாவர மற்றும் விலங்கினங்களை கொண்டு ஆராய்ச்சி செய்ததில் இலங்கை தீவானது தமிழ் நாட்டுடன் நிலத் தொடர்பு கொண்டிருந்ததாக ஆராய்ச்சியாளார்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள மன்னாரின் படிகப் பாறையும், மதுரையின் படிகப்பாறையும் ஒரே நிலத் தொடர்ச்சி என்று ஆராய்ச்சியாளார்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 1960 ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நிதி கொண்டு, இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சி செய்ததில், தமிழகத்தின் கன்னியா குமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச் சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். அத்திட்டம் ஏனோ 1960 ஆண்டுக்குப் பிறகு தொடரப்பட வில்லை! 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக்கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.
மேற்கூறிய சான்றுகளின்படி தற்போதைய இலங்கை தமிழகத்தின் ஒரு பகுதியே என்பதும் அங்கு வசித்தவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் என்பதும் தெளிவாகக் புலப்படுகிறது.
தமிழ் ஈழம் தமிழினத்தின் பிறப்புரிமை ! 50 ஆயிரம் ஆண்டுக்கால இலக்கிய வரலாறு கொண்ட தமிழே உலகின் முதன் மொழி! குமரிக் கண்டமே தமிழனின் பிறந்தகம். கடலில் மூழ்கிய குமரி நிலத்தின் எச்சமே இன்றைய தமிழீழம்! சிங்களவர்கள் இலங்கைத் தீவின் வந்தேறிகள்.
Wednesday, October 29, 2008
தமிழ் இனப்படுகொலையும் தமிழகமும்
Sunday, October 26, 2008
உக்கிரமான ஒரு தமிழ் உதிரம்
Sunday, September 14, 2008
குறுந்தொகை பாடல்கள் ( 4 -8 )
வில் வைத்து இருப்பவன் காலில் கழல் ,வளையல் அணிந்தவள் மென்மையான பாதங்களில் சிலம்பு அணிந்து வாகைமரங்களில் காய்ந்த நெற்றுக்கள் எழும்பும் ஒலியைப் போல கயிற்றின் மேல் நின்று கூத்தாடுகின்ற போது பறை அடித்துஒலி எழுப்பும் இந்த நல்லவர்களாகிய ஆரியர்கள் யார் என்று கூறுங்கள் கடலுக்கு அருகில் உள்ள மூங்கில் காட்டைநோக்கி முன்னே செல்கிறார்களே !
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.
----ஆலங்குடி வங்கனார்.
கழனி - வயல்;;; ;
மாஅத்து விளைந்துகு - விளைந்த மரங்களிலிருந்து உதிரும்;
தீம்பழம் - இனிய பழம்
கதூஉ - கவ்வும்
எம்மிற் பெருமொழி கூறித் - என் வீட்டில் பெரிசாக பேசுவான்
தம்மிற் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல - தன் வீட்டிற்கு சென்றால் கையும் காலும் தூக்கும்கண்ணாடி பாவை போலமேவன செய்யுந்தன் - வேண்டியதைச் செய்வான் தன்
புதல்வன் தாய்க்கே -
வயலோர மரங்களிலிருந்து உதிரும் இனிய பழங்களை வாளை மீன்கள் கவ்வும் ஊரை கொண்டவன் என் வீட்டில்பெரிசாக பேசுவான் தன் வீட்டிற்கு சென்றால் கையும் காலும் தூக்கும் கண்ணாடி பாவை போல தன் பெண்டாட்டிபேச்சை கேட்பான்.
