சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றும் இனப்படுகொலையை பற்றி இவ்வாறு கூறுகிறது.
(அ) இன / மத குழுவொன்றின் அங்கத்தவர்களைக் கொலைசெய்தல்.
(ஆ இன / மத குழுவொன்றின் அங்கத்தவர்களுக்கு உடல் ரீதியான அல்லது மனரீதியான கடுமையான தீங்கினைச் செய்தல்.
(இ) இன / மத குழுவொன்றின் பௌதிக இருப்பினை முற்றாக, அல்லது பகுதியாக அழிப்பதற்காக இக்குழுவின் வாழ்நிலையில் வேண்டுமென்றே பெரும் பாதிப்பினை ஏற்படுத்தல்.
(ஈ) இன / மத குழுவினுள் குழந்தைகளின் பிறப்புக்களைத் தடுக்கும் நோக்குடன் செயற்படல்.
(உ) இன / மத குழுவொன்றின் குழந்தைகளை இன்னொரு குழுவிற்குக் கைமாற்றிவிடல்.
இவை எல்லாமே இலங்கையில் ஐம்பது வருடமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.ஆனால் உலக சமுதாயம் இதை கண்டனம் செய்வதோ, கண்டு கொள்வதோ கிடையாது. எல்லாருக்கும் தெரிந்தே ஒரு இனப்படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படுகொலையை எதிர்த்துப் போராடினால் அவர்கள் பயங்கரவாதிகளா ? ஒரு நாட்டின் எல்லாக் குடிமக்களும் சமமானவர்களே என்று கருதும்போது தான் அந்த நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்படும்.அரசியல் அமைப்பு சட்டமே உரிமை மறுக்கும்போது அவர்களால் எப்படி வாழ முடியும் ?? தன்னாட்டு மக்கள் என்று கூறிக்கொண்டே அம்மக்களின் வீடு, பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்றவற்றில் வானூர்தி மூலம் குண்டு வீசுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது ?அதுவம் ஒரு முறை இரண்டு முறை அல்ல ஆறாயிரம் முறை.ஒரு பயங்கரவாதி பள்ளிகூடத்தில் இருந்தான் என்று சொல்லி எழுபது மழலைகளை கொன்றதே இது பயங்கரவாதம் இல்லையா ?? இது இனப்படுகொலை இல்லையா ?? எதிரி நாட்டு எல்லைக்குள் புகுந்து தாக்குவது போல் அல்லவா இருக்கிறது. யுத்த தர்மம் கூட காக்கப்படவில்லையே !! இப்படி உள்ள ஒரு அரசாங்கத்திடம் எப்படி சமத்துவத்தை எதிர் பார்க்க முடியும் ??
ஈழத் தமிழர்களுக்கு இது வாழ்வாதார பிரச்சனை;தமிழக அரசியல் தலைவர்களுக்கோ இது ஒரு ஆதாயம் தரும் பிரச்சனை. இந்தியாவிற்க்கோ இதை தீர்ப்பதற்கு மனம் இல்லை.ஏட்டலவிலே எல்லா ஒப்பதங்களும் , உபதேசங்களும்.
போர் நிறுத்த ஒப்பந்தமும் ஏற்கப்படவில்லை,ராணுவ உதவியும் நிறுத்தப்படவில்லை, பேச்சு வார்த்தைக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.இனப்படுகொலை தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது.தொடர்ந்து குண்டு வீசி அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்க ராணுவ உதவி ஒரு புறமும், குண்டு வீச்சில் ஊனமான மக்களுக்கு நிவாரண உதவி என்று மறு புறமும் (போர் நடந்து கொண்டிருக்கும்போதே எப்படி நிவாரணம் வழங்க முடியும் என்று தெரியவில்லை ??). என்ன இந்திய அரசின் கொள்கை... இப்படி ஒரு கொள்கைக்கு கருணாநிதியும் ஒரு உடன்பாடு.இவர் உலகத் தமிழர்களின் தலைவர் ??
ஒக்கனேக்கல் பிரச்சனையிலும் கருணாநிதி இப்படித்தான் நாடகமாடினார். இப்பொழுது இலங்கை பிரச்சனை !!.
திருவாரூரில் இருந்து ஒரு உடைந்த தகர பெட்டியுடன் சென்னை வந்து இன்று பல கோடிகளுக்கு அதிபதி ஆனதிலிருந்து தெரியவில்லையா அவரது தமிழ் உணர்வு எப்படி பயன்பட்டது என்று ?? என்று திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என்ற அரசியல் அமைப்பாக மாறியதோ அன்றே கருணாநிதியின் போராட்ட குணமும், தமிழ் உணர்வும் தர்ச்சார்பு உள்ளதாக மாறிப்போயிற்று.தமிழ் நட்டு மக்களும் மானாட மயிலாட பார்த்து விட்டு மறந்து விடுவார்கள். மக்களின் நிலை கண்டு ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை கருவறுக்கக் காத்திருக்கும் ஜெயலலிதா, சோ ,ஹிந்து ராம் போன்றோர்களுக்கு கொண்டாட்டம்.
சினிமாக்காரர்களின் காலடியில் தன் முதுகெலும்பை தேடிக்கொண்டிருக்கும்,சுயசிந்தனை இல்லாத,செம்மறி ஆட்டுக் கூட்டம் போல் செயல்படும் தமிழர்களிடம் வேறு ஒன்றும் எதிபார்க்க முடியாது.இனிமேலும் தமிழ் நாட்டு மக்களையோ, தமிழக அரசியல்வாதிகளையோ நம்புவதால் ஈழத்தமிழர்களுக்கு எந்த ஒரு உபயோகமும் ஏற்படாது. இந்தியா ஒருபோதும் தமிழ் ஈழம் அமைவதை ஆதரிக்கவும் செய்யாது, உருவாகவும் விடாது. அவர்கள் தெற்காசிய வல்லரசு கனவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை தெரியாமல் அவர்களையே உதவிக்கு அழைப்பது திருடனையே காவல் வைப்பது போன்றது.
பிள்ளையின் அருமை பிரசவ வலிதாங்கிப் பெற்றவளுக்கே தெரியும். வலியும், வேதனையும் அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்களால் மட்டுமே வைராக்கியத்துடன் போராட முடியும்.குளிர்சாதன அறைகளில் உட்காந்து இலங்கையின் தேசியம் பேசுபவர்களால் இவ்வலியை உணர முடியாது.சமமான வலிமை கொண்டவர்களுக்குள் மட்டுமே சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முடியும் இல்லையேல் ஒருவர் உயர்ந்து மற்றொருவர் தாழ்ந்து தான் வாழ வேண்டும்.அவர்கள் பள்ளத்தை இட்டு நிரப்ப போராடிக் கொண்டிருக்கிறார்கள்.அரசியல்வாதிகளே ,உதவ முடியாவிட்டாலும் போராட்டத்தை உருக்குலைக்க முயலாதிர்கள் !!
No comments:
Post a Comment