Friday, July 25, 2008

யார் திராவிடன் ?

யார் திராவிடன் ? 
தென்னிந்திய பகுதி மற்றும் வட இலங்கையில் வசிக்கும் திராவிட மொழி ( தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு) பேசும் குடும்பத்தினரையே திராவிடன் என்கிறோம். ஆனால் தற்போழுது மாற்ற மாநிலத்தவர் தங்களை திராவிடன் என்று சொல்லி கொள்ள விரும்பாததனால் தமிழர்களையே திராவிடன் எனக் கொள்ளலாம். 

தமிழர் என்பது மொழிப்பெயர் திராவிடர் என்பது இனப்பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்று தலைப்பில்கூட முடியும். ஆனால், தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிடமுடியாது, .இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தை சார்ந்தவனாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவனாயிருந்தாலும் அவன் திராவிடர் என்றதலைப்பில் தான் சேருவான். ஆகையால், திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன்அல்லாத ஒருவன் --- மொழி காரணமாக மட்டுமே தன்னைத் திராவிடன் என்று கூறிக்கொள்ள முடியாது.

திராவிட நாடு எது ?
1956க்கு முன் இருந்த சென்னை மாகாணத்தை நாம் 'திராவிட நாடு ' என்று சொல்லலாம். அப்பொழுது மலையாளம், கன்னடம், ஆந்திரம் பிரிந்திருக்கவில்லை. வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போய்விட்ட பிறகு இப்பகுதியை நான்கு பிரிவுகளாக வெட்டி விட்டார்கள். இப்பொழுது நம்முடன் மலையாள, கன்னட நாடுகளின் சம்பந்தமில்லாமல் தனித்தமிழ் நாடாக ஆகிவிட்டோம்.

ஏன் திராவிட இயக்கம் ? 
தமிழர் மத்தியில் நிலவிய சாதிக் கொடுமை முதலியவற்றுக்கு, வைதீகத்தையும், பிராமணரையுமே குற்றஞ்சாட்டினர் திராவிட இயக்கத்தினர். வைதீகத்துக்கு முந்திய பண்டைத் தமிழகம் சாதிப் பாகுபாடற்ற சமூகமாக இருந்ததை எடுத்துக்காட்டிய அவர்கள்,இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மக்களை அணிதிரட்டினர்.

திராவிட இயக்கம் வருணாசிரமத்தையும், அதற்குப் பின்புலமாக உள்ள இந்து மதத்தையும் எதிர்க்கத் துணிந்தது. கடவுள் பெயரைச் சொல்லித்தானே இந்தப் பார்ப்பான் சமூகக் கலாச்சாரத் துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறான். ஆக கடவுள் மறுப்பையும், நாத்திகத்தையும் இங்கே பேசியாக வேண்டியிருக்கிறது என்றும் அது கருதியது. 

பிராமணீயம், வருணாசிரமம், சாதீயம் இவற்றைக் கட்டிக்காக்கும் இந்து மத கொள்கைகள் பிரதான எதிரிகள். மொழி, தேசம் ஆகியவற்றின் மீதான பற்றுக்கள் இந்த எதிர்ப்பைப் பலவீனப்படுத்திவிடும் என்றனர் . எல்லாப் பற்றுக்களும் அடிமைத்தனதிற்கே இட்டுச் செல்லும் என்றனர்.

திராவிடன் என்றால் அவன் மூடநம்பிக்கைக்கு விரோதி; ஆரிய தருமத்திற்கு விரோதி; நூற்றுக்கணக்கான சாதிகள் என்று சொல்லுகின்ற அந்த மனுதர்மத்திற்கு விரோதி; மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும், மானத்தோடு வாழ வேண்டும். இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவன் தான் திராவிடன் என்றனர்.

தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைய உரிமை இல்லை என்பதால் அவர்களுக்காக ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியவர்கள் இவர்கள் . ஆனால் அதில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் மனதில் கடவுளை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் கடவுள் அருள் தங்களுக்குக் கிடைக்க வழியில்லையே என்ற கலக்கமும் இருப்பதை உணர்ந்தனர். அவர்களை மனத்தளவில் தளர்விலிருந்து மீட்க அவர் செய்த உளவியல் சிகிட்சையே கடவுள் மறுப்புப் போராட்டம்.மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பது அவ்வை சொன்னது. கடவுளின் வாசல் திறக்கவில்லையா. கடவுளே இல்லை என்று சொல். இல்லாத கடவுளிடத்தில் நீ ஏன் போகிறாய். உன்னையே நீ நம்பு என்பது அவர் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த உளவியல் பாடம்.இந்தப்பாடம் சரியாக சென்று சேர, சேர்ப்பிக்க ஒரு இளைஞர்படையை இந்த நம்பிக்கையோடு அவர் தயார் செய்ய வேண்டியிருந்தது. அதுதான் திராவிட இயக்கம்.

திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை வணங்குவதற்கு திராவிடர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.ஆனால் கடவுள் பெயரால் சொல்லி இழைக்கப்படும் சாதி கொடுமைகளுக்கு இவர்கள் எதிரி.கடவுள் பெயர் சொல்லி அநீதி இழிகப்படுவதால் கடவுளையே எதிக்கின்றனர். 

திராவிடர்கள் ஏன் இந்து மதத்தையே குறை கூறுகிறார்கள் என்பது வழக்கமாக முன்வைக்கப்படும் இன்னொரு கேள்வி. ஏனென்றால் அவர்களும் அதே கடவுள்களை வணங்குபவர்கள் தான். தன் வீட்டை சுத்தம் செய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அழுக்காக இருக்கும் தன்வீட்டை சுத்தம் செய்ய வேண்டிய கடமையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் இந்து மத பிரச்சினைகளை திராவிடர்கள் அலசுகிறார்கள். ஏன்பிற மத பிரச்சினைகளை பேசுவதில்லை என்பதற்கும் இதுவே பதில். அடுத்தவன் வீட்டை சுத்தம் செய்ய அவன் அழைக்காமல் நாமாகப் போக முடியுமா?

ஆரிய ஆதிக்கம் 

பண்பாடுள்ள மக்களைக் காட்டு மிராண்டிகள் வெற்றி கொள்வது இயல்புதான். திராவிடர்கள் ஆரியர்களிடம் வீழ்ந்ததற்கு இதுதான் காரணம் என்கிறார்கள் நேருவும், ராகுல சாங்கிருத்தியாயனும். வெற்றிதான் முக்கியம்; வழிமுறைபற்றிக் கவலைப் படவேண்டாம் என்றுதான் சாணக்கியனிலிருந்து சோவானவர்கள் வரை - அக்கிரகாரத்து அறிவாளிகள் கூட்டம் - உபதேசிக்கின்றன.

ஆரிய இதிகாச, புராண, இலக்கியக் கொள்கை கூட தர்மயுத்தம் குறித்தோ, யுத்த தர்மம் குறித்தோ கரிசனம் கொள்வதில்லை. நாங்கள் போர் தொடுக்கப் போகிறோம்; ஆதலால் உங்கள் நாட்டிலுள்ள கால் நடைகள், (ஆவினங்கள்) அவற்றைப் போன்றே சாது வான (!) பார்ப்பன மாக்கள், பெண்டிர், பிணியுடையோர், கர்ப்பிணிகள் போன்றவர்களைப் பாதுகாப்பான இடங்களில் பத்திரப்படுத் துங்கள் (புறம்) என்று பகை நாட்டரசுக்கு ஓலை அனுப்புவதும், பகைவரின் மரணத்தைக் கூட கண்ணீரால் கௌர விப்பதும் திராவிட - தமிழினப் பண்பாடாகும்.

வானாளாவிய கோபுரங்கள் உடைய நமது கோவில்களைக் கட்டுவதற்கு கோவிலுக்கு உரிமை கொண்டாடும் இவர்கள் (பார்ப்பனன் ) ஒரு செங்கல்லைக் கூட சுமந்து செல்லவில்லை. கட்டுமான பூஜை போட்டு பொற்காசுகள் மட்டும் பார்த்திருக்கிறார்கள். கோவில்களில் உள்ள ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு தூணும் நம் முன்னோர்களின் செல்வத்திலும், உழைப்பிலும், வியர்வையிலும், இரத்தத்திலும் உருவானவை. அதில் உள்ள சிலைகள் எல்லாமே உழைக்கும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்டவை. இவற்றிற்காக தன் சுண்டுவிரலைக் கூட அசைக்காத பார்ப்பனன் அங்கு உட்கார்ந்து கொண்டு உரிமை பேசுகிறான். யார் யார் கோவிலுக்கு வரலாம், யார் யார் பூஜை செய்யலாம் என்று பட்டியல் இட்டு காட்டுகிறான். பார்ப்பன புரட்டுக்களை அறிந்து கொண்ட இந்த காலத்திலும் 'சொல்லுங்க சாமி'ன்னு நாமும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.கோயிலைக் கட்டுவது தமிழ் அரசர், அதனைச் செய்து முடிப்பது சூத்திரர். ஆனால், அங்கு தமிழுக்கு இடமில்லை, சமஸ்கிருதமே இடம்பெற்றது. 

திராவிடன் ஆரிய ஆதிக்கத்தில் இருந்து மீண்டு தனித்தன்மை பெறுவதை சுயராஜ்யம் என்கிறான். ஆரியன் திராவிடரை அடக்கி அழுத்தி வைப்பதை, மனு ஆட்சி புரிவதை சுயராஜ்யம், தர்மராஜ்யம், ராமராஜ்யம் என்கின்றான். 

திராவிட இயக்கம் ஒரு இலட்சியத்துக்காக உருவானது. திராவிட முன்னேற்றக்கழகமோ அரசியல் ஆதாயத்துக்காகவே உருவானது. எனவே இரண்டையும் குழப்பிக்கொள்ள தேவையில்லை. 

நம் நாட்டில் திராவிட மக்களுக்குள்ளாகவே திராவிடர் ஆதித் திராவிடர் என்கின்ற ஒரு பிரிவு இருக்கிறது என்பதோடு ஆதித்திராவிட சமூகம் மிகப்பெரிய எண்ணிக்கை கொண்ட சமூகமாக இருந்து வருகிறது. திராவிட நாட்டில் எப்படி வெளியிலிருந்து வந்த ஆரியர்களுக்குத் திராவிட மக்கள் தீண்டப்படாதவர்களாயிருக்கிறார்களோ, அப்படி திராவிடர்களுக்கு ஆதித் திராவிடர்கள் அதைவிட மேம்பட்ட தீண்டப்படாதவர்களாயிருக்கிறார்கள். இந்நிலைமை திராவிட சமுதாயத்திற்கே ஒரு பெரும் மானக்கேடான நிலைமையாகும் என்பதோடும், திராவிடர்களை ஆரியர்கள் தீண்டப்படாத மக்களேன்று வகுத்திருப்பதையும் நடத்துவதையும் அரண் செய்கிறது. ஆகையால் ஆதித்திராவிடர் என்கின்ற பெயரே மாற்றப்பட்டு, இருவரும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்கின்ற பெயராலேயே வழங்கப்பட வேண்டுமென்பதும் திராவிடர்களுக்கு ஆதித்திராவிடருக்கும் சமுதாயத் துறையிலுள்ள எல்லா வித்தியாசங்களும், பேதங்களும் ஒழிந்து ஒரே சமூகமாக ஆகவேண்டும் என்பதும் எமது ஆசையும் திராவிட இயக்கத்தின் ஆசையும் கூட .

திராவிட கழக பேச்சுகளிலிருந்தும், எழுத்துகளிளிருந்தும் தொகுத்து தரப்பட்டுள்ளது

Saturday, July 19, 2008

நீங்காத நினைவுகள் ...


கண்ணிலிருக்கும் கருவிழியாய்
என்னிலிருக்கும் உன் நினைவலைகல்  
என்றும் உறங்காதவை !!  
தொலைதூரம் நீயுருந்தும்  
அடுக்கடுக்காய் ஆட்கொள்ளும் உன் நினைவுகள்  
சிதலமடைந்த என் செல்கலில்ருந்தும் நீங்காதவை !

Wednesday, July 16, 2008

தமிழர்களே தற்காப்பு கலையை தோற்றுவித்தவர்கள் !

மனிதனின் உணர்வுகளில் வீரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால், ஒரு வம்சத்தின் வெற்றியையோ புகழையோ நிர்ணயிக்கும் அளவுகோலாக வீரம் விளங்கியிருப்பது தெரியவரும்.உலகின் புகழ்வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன.

ஆதி மனிதன் கொடுரமான மிருகங்களிடமிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள அவற்றின் செயல்பாடுகளை ஒத்தே தனது பாதுகாப்பு முறைகளை உருவாக்கினான் . பிறகு கற்காலத்திலும் ( stone age ) உலோக காலத்திலும் ( iron age ) வெவ்வேறு ஆயுதங்களை படைத்தான். தற்காப்பு கலை என்றாலே நமக்கு சீனாவோ , ஜப்பானோ தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் தற்பொழுது நடைமுறையில் உள்ள பழைய தொன்மையான தற்காப்பு கலைகள் எல்லாம் தமிழ் பேசுபவர்களால் உருவாக்கப்பட்டது . ஆச்சிரயமாக உள்ளதா ?

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தற்காப்பு கலையானது தமிழகத்திலும் , வடகிழக்கு இலங்கையிலும் , கேரளாவிலும் , ஆந்திராவின் தென் பகுதியிலும் பழக்கத்தில் இருந்தது . கி பி 3 நூற்றாண்டுக்கு முன்பு வரை இலங்கை முழுவதும் தமிழ் மொழியே பேசப்பட்டது .பின்பு வங்காளத்தில் இருந்து வந்த வட இந்தியர்களால் இப்பொழுது பேசப்படுகிற சிங்கள மொழியானது உறுவானது. பின்பு வந்த சிங்களர்களும் தென் பகுதியிலும், மேற்கு பகுதிகளிலும் தான் குடி புகுந்தனர் .ஆதலால் இலங்கையில் தமிழ் பேசப்பட்ட இடங்களிலே தற்காப்பு கலை இருந்தது என்பது தெளிவு.

இரண்டாவதாக கேரளாவில் உள்ள மலையாள மொழியானது கி பி 8 நூற்றாண்டுக்கு பிறகே தமிழிருந்து பிரிந்து சென்றது.
(http://en.wikipedia.org/wiki/Malayalam_language,http://www.answers.com/topic/malayalam ) அதற்கு முன்பு வரை இருவரும் பொதுவான மொழியாகிய தமிழையே பேசினார். ஆனால் மிகவும் பழமையான கலையாக ( இரோப்பியர்களால் ) கூறப்படும் களரி கி பி 6 இம் நுற்றாண்டிலே பழக்கத்தில் இருந்ததாக தெரியப்படுகிறது.ஆகையால் இங்கும் தமிழ் மொழி பேசுபவர்களே உபயோகித்து வந்தனர்.

தெலுங்கு மொழி உருவாவதற்கு முன்பு வரை ஆந்திர மாநிலத்தின் தென்பகுதி முழுவதும் தமிழ் மொழியே புழக்கத்தில் இருந்தது வடபகுதி முழுவதும் Prakrit ( ) என்ற மொழியையே பேசினார்கள் .

பல கட்டுரைகளிலும், வலைப்பதிவுகளிலும் தற்காப்பு கலையானது சீனாவில் தரும போதிதர்மா என்பவரால் கற்று கொடுக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது ( http://en.wikipedia.org/wiki/Martial_arts ). இவர் தமிழ் நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் இருந்து சீனா சென்றவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே .கட்டுரையின்படி இவர்தான் மூச்சு பயிசியும், யோகாவும் கற்று கொடுத்தார் என்பதால் சீனர்களுக்கு முன்பே நாம் இக்கலையில் தேர்ந்திருந்தோம் என்பது உறுதி.

கி பி 10 நுற்றாண்டில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்ட பல்லவர்களின் இளவரசன் கண்டியன் என்பவன் தான் கம்போடியாவின் முதல் மன்னன் . கி பி 10 நுற்றாண்டில் உச்சத்தில் இருந்த சோழர்கள் தனது அதிகாரத்தை தெற்காசிய முழுவதும் பரப்பினர். கி பி 12 நுற்றாண்டில் பல்லவர்களும், சோழர்களும் தெற்கசியர்களுடன் மிகவும் நெருங்கிய கடல் வாணிபத்தில் ஈடுபட்டனர். தமிழர் ஆட்சிக்கு கீழ் அடிக்கடி பல தெற்காசிய நாடுகள் கொண்டு வரபபட்டன.தமிழர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட கோவில்களிருந்து அவர்களின் கலைத்திறமையை கண்டறியலாம் . இக்கட்டுரையின் மூலம் நான் கூற விரும்புவது என்னவென்றால் தமிழர்கள் தான் தற்காப்பு கலையை சீனாவுக்கும், தெற்காசியாவுக்கும் பரப்பியவர்கள். இதை இந்தோனேசியாவிலும், கம்போடியாவிலும் உள்ள கோவில்களின் மூலமும் மேற்கூறிய சான்றுகளின் மூலமும் அறியலாம் .

தமிழர் தற்காப்பு கலைகளை பின்வருமாறு பிரிக்கலாம் 
ஆயுதமில்லா தற்காப்பு  
அடிதடி  
குத்து வரிசை  
மல்யுத்தம்  
வர்மக்கலை  

ஆயுதம் கொண்டு  தற்காப்பு  
சிலம்பம்  
வளரி  
முச்சாண்  
இரட்டை முழங்கோல்  
இரட்டை வாள்  
வாள்  
வாள், கேடயம்  
வெட்டரிவாள்  
கத்தரி  
பீச்சுவா  
சுருள் பட்டை  
சூலம்  
மடுவு  
சுருள் கொம்பு 

வர்மக்கலை
வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும்.

வர்மக்கலை என்பது முழுக்க முழுக்க தற்காப்பும் மருத்துவமும் சேர்ந்த கலையே. பழங்காலத்தில் அது மருத்துவத்திற்கும் தற்காப்பிற்கும் பயன்படுத்தப்பட்டதால் ஆபத்தான கலையாக கருதப்படுகிறது. அடிப்படையில் மனித உடலின் மிகமுக்கியமான, ஆபத்தான இடங்கள் வர்மத்தில் குறிக்கப்படுவதால் வர்மக்கலையைக் கற்ற யாரும் அந்த இடங்களைத் தாக்கி செயலிழக்கச்செய்ய, பின்விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்ற உண்மையை உணர்ந்ததால் பழங்காலத்தில் ஆசான்மார் கட்டுப்பாடுடைய சீடர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். எனவே, இதன் மருத்துவ பகுதியும்கூட முழுமையாக மக்களை எட்டவில்லை.

இதன் மற்றொரு பகுதியான தற்காப்புப்பகுதியில் குறிப்பிட்ட இடத்தைத் தாக்கி மயக்கமுறச் செய்தல், உறுப்புகளைச் செயலிழக்கச் செய்தல், உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய புள்ளிகளாக 64 இடங்கள் தற்காப்பிற்காக குறிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற இடங்களில் தாக்கப்பட்டோரை எழுப்ப அடங்கல்கள் என்ற முக்கியமான 108 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தென்தமிழகத்தில் உள்ள பார்த்திபகேசரம் என்ற இடத்தில் வர்ம மருத்துவத்தையும், தற்காப்புக் கலையையும் கற்றுத் தருவதற்கு என தனி பல்கலைக்கழகமே செயல்பட்டு வந்துள்ளது. இங்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து பயின்றுள்ளனர். இங்கு பயின்றோரை மன்னர்கள் மெய்க்காப்பாளர்களாக வைத்துள்ளனர். பழங்காலத்தில் மனித வள௱ச்சிப்போக்கில் உருவான இக்கலை பல ஆசான்களால் செம்மைப்படுத்தப்பட்டு, சித்தர்களால் செவிவழிச்செய்திகளாகப் பாதுகாக்கப்பட்டு, பிற்காலத்தில் மரம் ஏறுதலைத் தொழிலாகக் கொண்டவர்களால் பயன்படுத்தப்பட்டது. அவர்களிடமே இதுதொடர்பான சுவடிகள் ஏராளமாக உள்ளன. இன்றும் இங்கு ஆசான் என்று அழைக்கப்படும் வர்ம வல்லுநர்களால் குரு-சீடர் முறைப்படி வர்மக்கலை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

இந்த வர்ம மருத்துவப் பகுதியில் தீர்க்க முடியாத, விபத்துகளால் ஏற்பட்ட பல்வேறு நோய்கள், பின்விளைவுகளான காக்கைவலிப்பு, மயக்கம், தீராத தலைவலி, காயவாதம் , பேசமுடியாமை போன்றவை வராமலேயே தடுக்கக்கூடிய எண்ணற்ற மருந்துகள் உள்ளன.
* எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்டு வரும் பின்விளைவுகள், உறுப்புகள் செயல்பாடின்மை, மேலும் அறுவை சிகிச்சை செய்தும் பயனளிக்காது என்று கைவிடப்பட்ட பல நோய்களை வர்ம மருத்துவத்தால் தீர்க்க முடியும். நோய்களால் ஏற்படும் பல எலும்புமுறிவுகளையும் (Pathological Fracture) சரிசெய்ய முடியும்.
* வர்ம மருத்துவ அடிப்படையிலான தடவுமுறைகள், பூச்சு முறைகள், ஒத்தட முறைகள், வேது பிடித்தல், கட்டு போடுதல் போன்றவை மருந்தில்லா மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டுவருவது இதன் சிறப்பம்சமாகும்.
* குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோரை எவ்வாறு தடவ வேண்டும், எந்தெந்த இடங்களைத் தூண்டவேண்டும் என்பன போன்ற தௌ¤வான விள௧கங்கள் இம்மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன. இதன் தடவுமுறையால் ஏராளமான ஆற்றலை உடலில் உருவாக்க முடியும் என்பதை எங்களின் அனுபவரீதியிலாகக் கண்டறிந்துள்ளோம். * விக்கல், வாந்தி, சன்னி, மயக்கம், நாக்கு புறந்தள்ளல், நாக்கு உள்ளே இழுக்கப்படுதல், பைத்தியம்போல் பேசுதல் போன்ற பல்வேறு வர்ம விளைவுகளை அவற்றின் அடங்கல்களை தூண்டுவதன் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் தீர்க்க இம்மருத்துவ முறையால் முடியும். பார்ப்போருக்கு இது ஏதோ கண்கட்டு வித்தை போலத் தோன்றும்.

குத்து வரிசை  
வரிசையான முறையில் குத்துவது (  'Kuttu' means punch or hit and 'Varisai' means sequence or order i,e using the punches in sequential order). இந்த வகை கலையில் எவ்வாறு கைகளையும் கால்களையும் தகுந்த முறையில் பாதுகாப்புக்காக பயன்படுத்துவது என்பது சொல்லப்படுகிறது.குத்து வரிசை பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்னால் யோகா, மூச்சு பயிற்சி மற்றும் சில உடற்பயிற்சிகள் கொடுக்கப்படும்.இப்பயிற்சியில் ஏறக்குறைய உடலின் எல்லா பாகங்களும் கைமுஸ்டி, முழங்கை, முழங்கால், பாதம் ஈடுபடுத்தப்படுகிறது.

மல்யுத்தம்
மல்யுத்தம் தமிழ் இலக்கியங்களில் 'மல்லாடல்' என வழங்கப்படுகின்றன. மேலும் இவ்வாடல் இதிகாசங்கள், புராணங்களிலும் குறிக்கப்படுகின்றன.

சிலம்பம்

சிலம்பம் என்பது கழி வைத்து ஆடுகிற ஆட்டம். முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சுழற்றி தாக்கவும் , தாக்குதலை தடுக்கவும் மேற்கொள்ளும் பயிற்சி. சிலம்பு மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் (நிலத்தில் இருந்து ஒரு ஆளின் நெற்றி புருவம் வரையான உயரமுடைய தடி).சிலம்பங்கிறது தற்காப்பு கலை மட்டுமல்ல; நம்முடைய உடலின் ஒட்டுமொத்த பாகங்களுக்கும் பயிற்சி தருகிற உன்னத கலையும்கூட.வளரி
வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய  தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளைசுழல்படைபடைவட்டம் என்றும் அழைத்தனர்

ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும். வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும். வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கள்ளர் நாடு, சிவகெங்கை - தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.

சுருள் பட்டை 
சுருள் பட்டை எனபது நீண்ட வாள்.இது மிகவும் வளையக்கூடிய மெல்லிய இரும்பால் ஆனது அதே சமயம் சதையை வெட்ட கூடிய அளவுக்கு கூர்மையானது . இது ஒரு இன்ச் அகலமும் 5 அடி நீளமும் கொண்டது. சுருள் போல மடித்தும் வைத்து கொள்ளலாம்.பொதுவாக இதை இடுப்பு பட்டையாக அணிந்து கொள்வர்.

அடிதடி  

முச்சாண் 

இரட்டை முழங்கோல் 

இரட்டை வாள் 

வாள்

வாள், கேடயம்

வெட்டரிவாள் 

கத்தரி 

பீச்சுவா

சூலம் 

மடுவு

சுருள் கொம்பு 


Reference www.tamilnation.org, wikipedia,etc.,
http://www.tamilnation.org/heritage/martial.htm

Tuesday, July 15, 2008

தீண்டல் !

கார்மேகத்தின் மின்னலாய் - உன்  
கண்கள் தீண்டும் இன்பம் !  

தென்றலினும் மென்மையாய் - உன்
சேலை தீண்டும் இன்பம் !  

திங்களின் குளிர்ச்சியாய் - உன்  
தேகம் தீண்டும் இன்பம் !  

கார்காலத்தின் இரவுகளாய் - உன்  
கைகள் தீண்டும் இன்பம் !  

மார்கழி மாத பனி மூட்டமாய் - உன்  
மூச்சு தீண்டும் இன்பம் !  

உன் ஒவ்வொரு அசைவுக்கும் என்னுள் ஓராயிரம் உணர்ச்சி பிளம்புகள் !  

தனிமையின் துயரங்களோடும்  
வாழ்கையின் வெருமைகலோடும் - உறவாடும் எனை  

ஒரே பார்வையில்  
உதிரத்தை உறைய வைப்பதும் எரிமலையாய் உருக வைப்பதும்  
இறந்து போகும் எனை மறுபடியும் உயிர்பிக்க முயல்வது ஏனோ ?

Friday, July 11, 2008

பழமொழி விளக்கம்

ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒரு சமுதாயத்தில், ஒரு பண்பாட்டில் உருவான நம்பிக்கைகளை, எண்ணங்களை, கருத்துக்களை, புத்திமதிகளை, அனுபவங்களை நறுக்குத்தெரித்தாற்போல நாலு வார்த்தைகளில் சொல்வதே பழமொழி. இது இலக்கிய நயமான சொற்களில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கொச்சையான கிராமத்தான் சொற்களிலும் இருக்கலாம். ஆனால் அதிலுள்ள ஆழமான கருத்தை விளக்க ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரையே தேவைப்படும். பாமர மக்களும் பழமொழிகளைச் சரளமாகப் பயன்படுத்துவது ஒரு பண்பாட்டின் அறிவு முதிர்ச்சியையும் அனுபவ முதிர்ச்சியையும் காட்டுகிறது. 

இக்கரைக்கு அக்கரை பச்சை
 
இது ஒரு அருமையான சொல்லாடல் முதுமொழி,அல்லது பழமொழி பசுமையும் ,பனி மேகங்களும், கானலும் ,நாம் இருக்கும் இடத்தில் தெரியாது.... இங்கிருந்து பார்த்தால் அங்கிருப்பது போலவும் அங்கிருந்து பார்த்தால் இங்கிருப்பது போலவும் தோன்றும்  

காய்ந்த மாடு கம்பிலே விழுந்தாற்போ 
பழங்காலத்தில் தமிழர்கள் நெல்லை மட்டும் விதைக்கவில்லை. நெல்லைத் தவிர கம்பு, வரகு, சாமை போன்ற பலவகையான தானியங்களைப் பயிர் செய்தார்கள். நெல்லு விதைத்த இடத்தை வயல் என்பது போல், கம்பு என்ற தானியம் பயிர் செய்த இடத்தைக் கொல்லை என்பார்களாம். இவ்வளவுக்கும் கம்பு அவ்வளவு சுவையானதுமில்லை, அதை விட நெல்லை விட மலிவானதும், இலகுவாகப் பயிர் செய்யப்படக் கூடியதுமாகும். பசியால் வாடிக்காய்ந்த மாடு எப்படிக் கம்பிலே விழுந்ததோ, அதாவது விழுந்து, விழுந்து சாப்பிட்டது போல, காணாததைக் கண்டவன் போல, யாராவது அவசரப்பட்டால், அல்லது ஆசைப் பட்டால் அல்லது யாராவது சுமாரான அழகுள்ள பெண்ணின் பின்னால் அலைந்தாலும் கூட இந்தப் பழமொழியைக் கூறுவார்கள் 

கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா…? வண்டு துளைத்த பழம் இனிப்பாக இருக்குமென்று சொல்லுவர் ஆனால் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று மாட்டிக் கொள்ளும் வண்டு ஒரு கள்ளன் ,அந்தக் கனியின் சுவையைக் கூட அறிய முடியாமல் , சுவைக்க முடியாமல் மாங்கொட்டையின் உள்ளே மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறது பூ மூடிக் கொண்டு காயாகி பின் கனியாகி அதையாராவது உண்ணும்போதுதான் வெளியே வரமுடியும் அதனால் கள்ளனாய் இருப்பதை விட காப்பனாய் இருப்பதே மேல்

ஊரோடு ஒத்து வாழ் 
ஊரோது ஒத்து வாழ் என்றால், நீ எந்த ஊரில் இருந்தாலும், அது சொந்த ஊராக இருந்தாலும் சரி, வேறு ஊராக இருந்தாலும் சரி . அக்கம் பக்கம் உள்ளவர்களிம் அன்புடனும் ஆதரவுடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்பதே இத‌ன் உ‌ண்மையான பொருளாகும். இதையே ஔவையார் ஊருட‌ன் பகைக்கின் வேறுட‌ன் கெடும் எ‌ன்று கூறியுள்ளார்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒருவர் பிறருடன் ஒற்றுமையாக இருந்தால் மகிழ்ச்சியாக வாழலாம். ஏனெனில் அவருக்குப் பிறர் உதவி எப்போதும் கிடைக்கும். மற்றவர்களிடம் ஒற்றுமையில்லாதவருக்கு யாரும் உதவ மாட்டார்கள்.

நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் 
அதாவது, நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழியை நாம் நகைச்சுவைக்காகஅல்லவா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.இது தவறு, ஓர் அரண்மனை வாயிலில் நாயைக் கட்டி வைக்க வேண்டும் என்று மன்னன் விரும்பினான். அது கொஞ்சம் சிரமம் என்பதால்அதற்கு மாறாக நாயை தத்ரூபமாக கல்லில் செதுக்கி அரண்மணை வாயிலில் அமைத்தனர்.அதனை சற்றுத் தொலைவில் இருந்து கண்டுற்ற பொது ஜனம் ஒருவர், அதை உயிரோடு இருக்கும் நாய்தான் என்று எண்ணினார். ஒரு சிலநாட்கள் கழித்து அதனை பார்த்த அவர், ஒரு நாய் எவ்வாறு ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் என்ற சந்தேகத்தில் அருகேச் சென்றுப் பார்த்தார்.அப்போதுதான் அது நாய் அல்ல கற்சிலை என்பது விளங்கிற்று. அப்போது அந்த நிகழ்வைக் குறிக்கும் விதத்தில் கல்லாகக் கண்டபின் அங்குநாய் இல்லை. நாயாக காணும்போது அங்கு கல் தெரியவில்லை என்று கூறினர். அதாவது நாம் ஒரு விஷயத்தை எவ்வாறு பார்க்கிறோமோ அது அவ்வாறு தான் நமது கண்களுக்குப் புலப்படுகிறது என்பதை உணர்த்துவதேஇந்த பழமொழி.  

அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் 
இதனை நாம் மற்றவர்களை அடிக்கும் போதோ அல்லது அடி வாங்கும்போதோ எத்தனை முறை காதில் கேட்டிருக்கிறோம். இது தவறுஅதாவது பழமொழியின் உண்மையான பொருள்... ஆண்டவனின் திருவடி நிழல் உதவுவது போல அண்ணன் தம்பிகள் கூட உதவ மாட்டார்கள்என்பதுதான். ஆண்டவனின் திருவடியைத்தான் அடி என்றார்களேத் தவிர, மற்றவர்களை துன்புறுத்தும் விதத்தில் நாம் அடிப்பதை அல்ல.  

முதலைக் கண்ணீர் வடிப்பது போன்று  
யாராவது போலியாக அழும்போது முதலைக் கண்ணீர் வடிப்பது போன்று என்று ஒரு பழமொழியைச் சொல்வார்கள். அதாவதுஅறிவியல் பூர்வமாக முதலை கண்ணீர் வடிப்பதில்லை. அதனால் இந்த அழுகை போலியானது என்பதை உணர்த்துவதற்காக அவ்வாறுசொல்லப்படுகிறது.ஆனால் அதற்கான பொருள் அதுவல்ல, முதலை இழந்தவன் வடிக்கிற கண்ணீர் போல என்பதுதான் நாளடைவில் திரிந்து முதலைக் கண்ணீர்என்றாகிவிட்டது. அதாவது தொழிலில் முதல் போட்டு செய்தவன் இழப்பு ஏற்பட்டால் கண்ணீர் வடிப்பதைப் போன்றது என்பதை கூறவே இந்தபழமொழி உண்டானது.  

வெளுத்ததெல்லாம் பாலல்ல  
நல்லவர்கள் போல் வெளியே பேசப்படுபவர்கள் எல்லோரும் நல்லவர்கள் அல்ல இன்னும் வரும் ....

வர்மம் - தமிழனின் தற்காப்புக் கலை

உலகின் புகழ்வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன. கோழைத்தனம் குடிபுகுந்த எந்த ஒரு வம்சமும் கொற்றம் அமைத்துக் கோலோச்சியதாக வரலாறு இல்லை. பகைவரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வோடு, உலகின் ஒவ்வோர் இனமும் வீர விளையாட்டுக்களுக்கான வியூகங்களை வகுத்துக் கொண்டன. ஐம்புலன்களையும் அடக்கி, உடலையும் மனதையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த மனித இனங்கள், உயிர்காக்கும் தற்காப்புக் கலைகளையும் உருவாக்கி, அவற்றைப் பேணிடும் வகையில் பாசறைகள் அமைத்துப் பயிற்சிகள் மேற்கொண்டன. இதில் தமிழினமும் அடங்கும்.

“வாளொடு முன்தோன்றி மூத்தக் குடி” என்னும் செவ்விய கூற்று, தமிழ் இனத்தை ஒரு வீரப் பரம்பரையாகவும், தமிழ் மண்ணை ஒரு வீரத்தின் விளைநிலமாகவும் சித்தரிப்பதாகும். தற்காப்புக் கலையில் தமிழ் இனம் தழைத்தோங்கியிருக்கிறது என்பதற்குச் சங்க நூல்கள் தொட்டே தடயங்கள் கிடைக்கின்றன. “முதுமரத்த முரண்களரி வரிமணல்” என்ற பட்டினப்பாலைக் குறிப்பு ஒன்று, தமிழனின் போர்த்தொழில் வித்தைகள் பற்றிய குறிப்புக்கள் தருகின்றது. தொல்காப்பியம், பதிற்றுப் பத்து, புறப்பொருள் வெண்பாமாலை, திருமந்திரம் ஆகிய நூல்களிலும் தமிழனின் தற்காப்புக்கலை அங்கங்கள் விரித்துரைக்கப் பட்டிருக்கின்றன.

ஆனால், இந்தப் போர்த்தொழில் வித்தைகட்கெல்லாம் அப்பாற்பட்டு, தமிழினம் அறிந்துவைத்திருந்த “வர்மம்” என்னும் தர்மம், உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் செம்மாந்து நிற்கிறது. சித்தர் பெருமக்களின் செய்தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது தாங்கொணாத வேதனையாக இருக்கிறது. அந்த வேதனைக்குக் கடுகளவேனும் விடிவுகாணும் முடிவுதான் இந்தக் கட்டுரையின் கருப்பொருள்.

வர்மத்தின் எண்ணிக்கைகள், வர்ம நாடிகளின் உட்பிரிவுகள், மாத்திரைகள், காலங்கள், ஈடுகள், அடங்கல்கள், இளக்குமுறைகள் இன்னோரன்ன விளக்கங்களையெல்லாம் யான் இங்கு விலாவாரியாக எழுதிடக் கருதவில்லை. மாறாக, வர்மக் கலையின்பால் தமிழனுக்கு உண்டாக வேண்டிய பெருமிதங்களையும் பெருங்கடமைகளையும் மட்டும் ஒரு படைப்பாளனின் பார்வையில் நின்றுகொண்டு அலசிட முற்படுகிறேன்.

“வர்மம்” வடமொழியா?

தமிழின் வரலாறும் சொல்வளமும் அறியாத சிலர் “வர்மம்” ஒரு வடமொழிச் சொல் என்றும் வர்மக் கலையானது சமஸ்கிருத நூல்களிலிருந்துதான் தமிழுக்குப் பெயர்க்கப்பட்டதென்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற கொள்கையுணர்வு இங்கே நமக்கு மிகமிகத் தேவைப்படுகிறது. அத்தோடு, இலக்கண விதிகளையும் விளக்கங்களையும் ஊடகமாக வைத்து இதை நாம் அணுகவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.

தமிழில் “வல்” என்னும் சொல் ஒன்று உண்டு. அச்சொல் நிலைமொழியாக நிற்பின், ஏவல் வினைமுற்று ஆகும். அந்த நிலைமொழியோடு வருமொழியாக ஒரு பெயர்ச் சொல்லை இணைத்தால், அதை உரிச்சொல் ஆக்கிவிடலாம் (எடுத்துக்காட்டு: வல்+இனம் ஸ்ரீ வல்லினம்). நிலைமொழி ஒரு பகுதியாக நிற்க, அதனை இன்னொரு விகுதியோடு புணர்ந்திட அனுமதித்தால், அது பெயர்ச்சொல் ஆகிவிடும், அதாவது, பகுதி மற்றும் விகுதியின் இணைப்பால் ஒரு புதிய சொல் பிறக்கும் என்பது புணரியல் விதி. இந்த விதியின் அடிப்படையில், “வல்” என்ற பகுதியோடு “மை” என்ற (தொழிற்பெயர்) விகுதியை இணைத்தால் “வன்மை” என்ற பெயர்ச்சொல் பிறக்கிறது. “வன்மை” என்ற சொல்லுக்கு “வல்லமை” “வல்லவனாக இருத்தல்” “வலிமை பொருந்திய செயல்புரிதல்” என்றெல்லாம் பொருள்விளக்கம் கொடுக்கலாம். இந்த “வன்மை” என்ற சொல்லின் வேறொரு வடிவம்தான் “வன்மம்”. “வன்மம்” என்ற இந்தச் சொல்லில்கூட “அம்” என்ற ஒரு தொழிற்பெயர் விகுதிதான் இணைந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

“வன்மம்” என்னும் இந்தத் தூய தமிழ்ச் சொல்தான் காலப் போக்கில் “வர்மம்” என மருவியிருக்கிறது என்பது மொழியியல் ஆராய்ச்சிகளின் மூலம் மறுப்பிற்கிடமின்றித் தெளிவாகியுள்ளது. ‘ன’கர ‘ண’கர ஒற்றுக்கள் ‘ர’கர ஒற்றாகத் திரிவது என்பது, தமிழ்ச் சொற்களின் மரூஉக் களங்களிலே பரவலாகக் காணப்படும் மாற்றங்கள் ஆகும். ‘வண்ணம்’ என்பது ‘வர்ணம்’ என்று வழங்கப்படுவதும், ‘துன்மார்க்கம்’ என்பது ‘துர்மார்க்கம்’ என்று வழங்கப்படுவதும் இதற்கான சில எடுத்துக்காட்டுக்கள். இப்படித்தான் ‘வன்மம்’ என்பதும் ‘வர்மம்’ என்று மருவியிருக்க வேண்டுமென்பது இலக்கணம் படித்தவர்க்கு எள்ளளவும் ஐயமின்றி விளங்கும். பண்டைத் தமிழ் மன்னர்கள் சிலர், ‘வர்மன்’ என்னும் சொல்லைத் தமது ஈற்றுப் பெயராகக் கொண்டு திகழ்ந்திருப்பதைக் காணுங்கால், அது ‘வர்மம்’ என்ற தூய தமிழ்ச் சொல்லோடு ‘அன்’ என்னும் ஆண்பால் விகுதி நிகழ்த்தியிருக்கும் சுத்தமான இலக்கணப் புணர்ச்சிதான் என்பதும் எந்தவொரு தமிழ்மகனுக்கும் எளிதில் விளங்கும். வாதத்துக்கெல்லாம் அப்பாற்பட்ட “வர்ம” வரலாறு இதுதான். இதற்குப்போய்ச் சமஸ்கிருதச் சாயம் பூசுவதை எப்படிச் சகிப்பது?

சமஸ்கிருதத்திலும் வர்மநூல்கள் இல்லாமல் இல்லை. தமிழனின் கலைகளையெல்லாம் கபளீகரம் செய்து தத்தமது மொழிகளில் புத்தம்புது பெயர் சூட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த வடவர் குலம், வர்மக் கலையையும் விட்டு வைக்கவில்லை. வர்ம ஸ்தானங்களை விளக்கி வாக்படேர் என்னும் சமஸ்கிருத ஆசிரியர் எழுதிய நூலின் பெயர் “அஷ்டாங்க ஹ்ருதயா” என்பதாகும். அந்த நூலின் தலைப்பிலும் சரி, உள்ளடக்கங்களிலும் சரி “வர்மம்” என்ற சொல் எந்த இடத்திலும் மூலச்சொல்லாக வழங்கப்படவில்லை யென்பது குறிப்பிடத்தக்கது. எனவே, “வர்மம்” வடமொழிச் சொல் அல்ல என்பது தெளிவாகிறது.

இது இவ்வாறிருக்க, தமிழனின் வர்மக்கலை நூல்களில் வடமொழிச் சொற்கள் இருக்கிள்றன என்பதையும் நாம் மறுக்க முடியாது. நட்சத்திர காலம், சந்திர கலை, சர்வாங்க அடங்கல், தட்சிணா வர்மம் போன்றவை எடுத்துக்காட்டுக்கள். இருப்பினும், இவை மிகக் குறைவாகவே உள்ளன. அதுவும் வடமொழித் தாக்கத்தினால் வந்து புகுந்துவிட்டவைதான். அவற்றுக்கு ஈடான தமிழ்ச் சொற்கள் நம்வசம் இருந்திருந்தும், அச்சொற்களை நம்மவர்கள் கையாள முடியாத அளவுக்கு வடமொழி ஆதிக்கம் கோலோச்சியிருக்கிறது என்பதைத்தான் இது நமக்கு உணர்த்துகிறது. தமிழின் சொல்வளம் உலகறிந்த உண்மை. இன்னும் சொல்லப்போனால் நமது வர்மநூல்களில் காணப்படுகின்ற தமிழ்ச் சொற்கள்தான் ஒருசில வடிவமாற்றங்களோடு வடமொழியில் வாசம் புரிகின்றன என்பதற்கு ஆதாரங்கள் காட்டலாம்.

பதஞ்சலி முனிவனின் யோகசாஸ்திரத்தில் காணப்படும் “சூஷ்மனா” (தமிழில் ‘சூட்சுமம்’ என்பார்கள்) என்பது, நமது வர்மநூலில் உள்ள “சுழிமுனை” என்பதன் வடிவமாற்றம் ஆகும். ‘சுழிமுனை’ என்னும் சொல், நம் உடலில் உள்ள மிக முக்கியமான இரண்டு உயிர்நிலை முடிச்சுகளைக் குறிப்பதாகும். “சுழிமுனைகள் இரண்டுண்டு” என்று நமது தமிழ் வர்மநூல்கள் குறிப்பிடுகின்றன. அதாவது, ணநசழ pழiவெ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாக வழங்கப்படத் தகுந்த அப்பட்டமான ஆதித் தமிழ்ச் சொல்தான் ‘சுழிமுனை’. அதைத்தான் வடவர்கள் எடுத்து வைத்துக்கொண்டு “சூஷ்மனா” என்கிறார்கள். “சுழி” என்ற சொல்கூட “சுழியம்” என்ற தொழிற்பெயர் வடிவம் கொண்டு, இப்போது பரவலாக இதர இந்திய மொழிகளில் “சூன்யம்” என்று வழங்கப்பட்டு வருவதை யார்தான் மறுக்க முடியும்? இதே “சுழி” எனும் சொல்தான் “ணநசழ” என்று வழங்கப்படும் ஆங்கிலச் சொல்லுக்கும் நதிமூலம் என்பது சொற்பிறப்பியல் வரலாற்றில் கிடைக்கும் இன்னொரு சுவையான தகவல். ஆக, எத்தனையோ தமிழ்ச் சொற்கள் பிறமொழிகளுக்கு இடம்பெயர்ந்து அங்கே சில வடிவ மாற்றங்களுடன் குடிகொண்டிருக்கின்றன என்னும் பேருண்மை நாளுக்கு நாள் ஆதாரங்களுடன் வலுவடைந்து வருகிறது.

வர்மமும் கிரேக்கமும்!

கிரேக்கமும் திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், எண்ணிறந்த தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது. “வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.

தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!

இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது என்பது வரலாற்று அறிஞர்கள் தெளிந்துரைக்கும் முடிவு. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன. தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று, வௌ;வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.

தற்காப்புக் கலையைப் பொறுத்தமட்டில், சீனம் நெடுங்காலமாகவே சிறந்து விளங்கியிருக்கிறது. அங்கும் அடிமுறை ஆசான்மார் பெரும் அரசியல் ஞானிகளாகக் கோலோச்சியிருப்பது வரலாற்றில் பதிவாயிருக்கிறது. தற்காப்புக் கலையில் சீனம் எந்த அளவுக்குப் பிரபலம் வாய்ந்தது என்றால், இன்றும் கூட தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வசிக்கும் அடிமுறை ஆசான்மார் தற்காப்புக் கலையைச் “சீனாடி” என்று குறிப்பிடுவதுண்டு.

சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

வர்மத்தின் அதிசயங்கள் !!

வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விழைகிறேன்:

 ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.
 வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.
 ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.
 ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.
 நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.
 மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்.

வர்மக்கலை ஆசிரியர் யார்?

“வர்ம”மெனும் பொக்கிஷத்தின் வானளாவிய புகழ்பற்றிச் செருக்கும் செம்மாப்பும் பூண்டிருக்கும் தமிழினம், அதன் ஆசிரியன் யார் என்பதற்குச் சரியான விடைதர இயலாமல் தலைநாணி நிற்கிறது. ஒப்பற்ற இக்கலைக்கென்று உலகளாவிய பொது நூல் ஒன்று நம் கையில் இல்லை என்பது உண்மையிலேயே வருத்தம் தருகிறது. வர்மத்தைப் பற்றி வலுவானதொரு இலக்கண நூல் வகுத்து, உலக அரங்கிலே உலா வரவேண்டிய உன்னத நிலையைக் தமிழ் அன்னைக்கு நம் முன்னோர் தரவில்லையே என்ற துயர்மிகுந்த ஆதங்கம் நம்மைத் துளைத்தெடுக்கிறது.

சிவபெருமான்தான் இதன் ஆசிரியன் என்கிறது “வர்ம காவியம்” என்னும் நூல். அகத்திய முனிவன்தான் இதன் ஆசிரியன் என்கின்றன சில பண்டைய செவிவழிச் செய்திகள். அகத்திய முனிவன் வர்மசாஸ்திரத்தை சமஸ்கிருத்தில் மட்டுமே எழுதியதாக மலையாளக்காரர்கள் வேறு வாதிடுகின்றனர். இவ்விரண்டு ஆசிரியர்கள் பற்றிய கூற்றும் உறுதி செய்யப்படாத வெறும் யூகங்கள் என்பதால் இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு நாம் பெருமை தேடிக் கொள்ளவோ உலக அரங்கில் பீடுநடை போட்டுப் பறைசாற்றி நிற்கவோ மார்தட்டிப் பேசவோ நம்மால் இயலாமற் போகிறது.

வர்ம நூல்களின் வரிசைகள்!

வேறு யார்தான் வர்மக்கலையின் ஆசிரியர்கள்? ஆளாளுக்கு நிறைய பாடல்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். அத்தனையும் விருத்த வடிவம் கொண்டவை. அவற்றுள்ளே நூற்றுக்கணக்கான சொற்பிழைகள். பொருள் முரண்பாடுகள். இடைச் செருகல்கள். இலக்கணத் தவறுகள். யாப்பிலக்கணச் சீர்கேடுகள். இலக்கணப் பிழையின்றி, இலக்கியத் தரம் குன்றாமல் எந்தவொரு வர்மநூலும் நம்மிடையே இல்லை. சித்தர்கள் மற்றும் முனிவர்கள் போர்வையில் பற்பலரும் அரைகுறை யாப்பிலக்கணத்தில் அடுக்கடுக்காய் எழுதி வைத்திருக்கும் இப்பாடல்கள் நமக்குப் பெருமை சேர்ப்பனவாக இல்லை. பவணந்தியின் “நன்னூல்” போலவோ, திருமூலரின் “திருமந்திரம்” போலவோ செந்தமிழ் மணம் வீசிடும் செய்யுள் நூலாக எந்தவொரு வர்மநூலும் தமிழில் இல்லை. வள்ளுவனையும் இளங்கோவையும் கம்பநாடனையும் காளமேகனையும் கைவசம் வைத்திருக்கும் நாம், வர்மநூலை எழுதியவனென்று பேர் சொல்லும்படியாக ஒரு பெரும்புலவனை அடையாளம் காட்ட முடியாத நிலையில் இருக்கிறோம் என்பது ஆற்றொணாத பெருங்குறை.

வர்ம சூத்திரம், வர்ம சூட்சுமம், வர்மப் பீரங்கி, வர்மக் கண்ணாடி என்று நமக்குக் கிடைத்துள்ள பலதரப்பட்ட வர்மநூல்களில் சில வர்மங்கள் ஒன்றுக்கொன்று முரணாக விளக்கப் பட்டிருப்பதும், சில வர்மங்கள் முற்றாக விடுபட்டிருப்பதும், சில இடங்களில் விருத்தங்கள் அரைகுறையாகவே காட்சியளிப்பதும், இந்த மாபெரும் கலைக்கு இழைக்கப்பட்டிருக்கும் களங்கம் என்றே கருதவேண்டியிருக்கிறது.

வள்ளுவனும் வர்ம நூலும்!

வள்ளுவன் காலத்தில்கூட வர்மம் மாண்புற்று விளங்கியிருக்க வேண்டும். அதற்கான சான்றுகள் திருக்குறளிலேயே போதிய அளவுக்குக் கிடைக்கின்றன. “நூல்” என்ற சொல்லைக் கையாளுகின்ற பெரும்பாலான இடங்களிலெல்லாம் வள்ளுவன் வர்மத்தையும் வைத்தியத்தையும் சுட்டிக் காட்டுவதாகத் தோன்றுகிறது. “ஏதிலார் நூல்” (குறள்: 440) என்றும் “நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று” (குறள்: 941) என்றும் எழுதுகிற வள்ளுவன், வர்மக் கலையையும் வர்ம நாடிகளையும் நேரடியாகவே சுட்டிக்காட்டுகிறான் என்பது கூர்ந்து நோக்கத் தக்கது. நமது வர்மச் சுவடிகளில் கூட “திறமான நூல் எவர்க்கும் வெளியிடாதே!” என்றும் “பொருள் வாங்கி நூலே ஈயே” என்றும் “நூல் தா என்று உன்னை ஏய்ப்பர்!” என்றும் காணப்படுகின்ற வரிகளில் “நூல்” என்ற சொல் நேரடியாக வர்மக் கலையைச் சுட்டிக்காட்டத்தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. எனவே வள்ளுவனும் அதே பொருளில் “நூல்” என்ற சொல்லைக் கையாண்டிருப்பதில் எந்த வியப்பும் இல்லை. ஒருவேளை வள்ளுவனே வர்மம் பற்றியும் ஓர் இலக்கியம் வடித்திருப்பானோ? நம் கைகளுக்கு அது கிடைக்காமற் போனதோ? யார் கண்டார்கள்!... மொத்தத்தில் வர்மக் கலையின் சூத்திரதாரியாக வள்ளுவன் உட்பட எந்தப் புலவனையும் சொந்தம் கொண்டாட முடியாத சோக நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்பது உண்மை.

தமிழ் இனம் செய்யவேண்டியது என்ன?

தமிழன் விழிக்க வேண்டும். வர்மக் கலையின் உன்னத சக்திகளை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். ஆற்றல் மிக்க அடல்மறவரும் ஆசான்மாரும் வர்மப் புலவோரும் ஒருங்குகூடி, ஓர் உலகப் பொது வர்ம நூலை இலக்கண வளத்தோடும் இலக்கிய வனப்போடும் யாத்து, அதை அன்னைத் தமிழாள் மலரடிக்கு அர்ப்பணிக்க வேண்டும். அந்தக் கடமையினின்று தமிழன் தவறிட நேர்ந்தால், சரித்திரத்திலே தமிழ்ப் புலத்தின் வெற்றிச் செருக்கிற்கோர் சறுக்கல் விளைந்திடும் அபாயம் உண்டு.

courtesy by www.keetru.com

Tuesday, July 8, 2008

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு

ஒரு வலைப்பதிவில் கண்டதை தொகுத்து தந்திருக்கிறேன் ..... ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும்,பயந்துகொண்டே இருக்க வேண்டும் என்றும், முட்டாளாகத் திரிய வேண்டும் என்று நம் முன்னோர்கள் நினைத்து இதை சொன்னார்கள் என்று எண்ணுவது தவறு. 

கணவன், மனைவி இரண்டு பேர் தனிமையில் இருக்கும் போது(சயனக் கிருகம்) வேண்டிய குணம் அது நாலும். சரியாச் சொல்லப் போனால் முதல் மூணும் 

பொய் அச்சம்  

பொய் நாணம் 

பொய் மடம். 

அச்சம்  

அச்சமில்லாமல் அச்சப்படுவது போல் நடிப்பது.  

சமையலறையில் கரப்பான் பூச்சியைப் பார்த்தால் துடைப்பக் கட்டையைத் திருப்பிக்கொண்டு நாலு போடு போடும் அதே பெண், சயன அறையில் அதே கரப்பான் பூச்சியைப் பார்த்தால் 'ஐயோ! கரப்பூ பா... எனக்கு கரப்புன்னா ரொம்ப ரொம்ப பயம்' என்று கணவனின் பின்னால் ஓளிவது 

மடம்  

தெரிந்திருந்தாலும் தெரியாததைப் போல பண்ணும் பாவனை.  

அலுவலில் லாஜிக் தப்பா சொன்னா தலையில் குட்டும் அதே பெண், சயன அறையில் கணவன் சொல்லும் லாஜிக் மாதிரி பெஸ்ட் எதுவும் இல்லை என்கிற மாதிரி பாவ்லா பன்னுவது. 

நாணம்  

சொல்ல வந்ததை சூசகமாக(சிறிது வெட்கத்துடன்) சொல்லும் இடம்.  

பயிர்ப்பு  

தன் கணவன் அல்லாத ஓர் ஆடவன் தன்னைத் தொடும்போது (தொடுகையே நோக்கம் சொல்லும். நோக்கம் வேறு மாதிரியாகத் தோற்றம் தரும்போது) உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி. இந்த உணர்ச்சி ஆணுக்கும் உண்டு