கார்மேகத்தின்  மின்னலாய்  - உன்              
கண்கள்   தீண்டும் இன்பம்  !    
தென்றலினும் மென்மையாய்   - உன்
சேலை தீண்டும் இன்பம் !    
திங்களின் குளிர்ச்சியாய் - உன்           
தேகம்  தீண்டும் இன்பம் !    
கார்காலத்தின் இரவுகளாய்  - உன்               
கைகள் தீண்டும் இன்பம் !  
மார்கழி மாத பனி மூட்டமாய்  - உன்        
மூச்சு தீண்டும் இன்பம் !   
உன் ஒவ்வொரு அசைவுக்கும் என்னுள் ஓராயிரம்  உணர்ச்சி பிளம்புகள் !   
தனிமையின்  துயரங்களோடும்  
வாழ்கையின் வெருமைகலோடும்  - உறவாடும் எனை  
ஒரே பார்வையில்    
       உதிரத்தை உறைய   வைப்பதும் எரிமலையாய்  உருக வைப்பதும்  
      இறந்து போகும் எனை மறுபடியும் உயிர்பிக்க முயல்வது  ஏனோ ?  
No comments:
Post a Comment