தென்னிந்திய பகுதி மற்றும் வட இலங்கையில் வசிக்கும் திராவிட மொழி ( தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு) பேசும் குடும்பத்தினரையே திராவிடன் என்கிறோம். ஆனால் தற்போழுது மாற்ற மாநிலத்தவர் தங்களை திராவிடன் என்று சொல்லி கொள்ள விரும்பாததனால் தமிழர்களையே திராவிடன் எனக் கொள்ளலாம்.
தமிழர் என்பது மொழிப்பெயர் திராவிடர் என்பது இனப்பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்று தலைப்பில்கூட முடியும். ஆனால், தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிடமுடியாது, .இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தை சார்ந்தவனாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவனாயிருந்தாலும் அவன் திராவிடர் என்றதலைப்பில் தான் சேருவான். ஆகையால், திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன்அல்லாத ஒருவன் --- மொழி காரணமாக மட்டுமே தன்னைத் திராவிடன் என்று கூறிக்கொள்ள முடியாது.
திராவிட நாடு எது ?
1956க்கு முன் இருந்த சென்னை மாகாணத்தை நாம் 'திராவிட நாடு ' என்று சொல்லலாம். அப்பொழுது மலையாளம், கன்னடம், ஆந்திரம் பிரிந்திருக்கவில்லை. வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போய்விட்ட பிறகு இப்பகுதியை நான்கு பிரிவுகளாக வெட்டி விட்டார்கள். இப்பொழுது நம்முடன் மலையாள, கன்னட நாடுகளின் சம்பந்தமில்லாமல் தனித்தமிழ் நாடாக ஆகிவிட்டோம்.
ஏன் திராவிட இயக்கம் ?
தமிழர் மத்தியில் நிலவிய சாதிக் கொடுமை முதலியவற்றுக்கு, வைதீகத்தையும், பிராமணரையுமே குற்றஞ்சாட்டினர் திராவிட இயக்கத்தினர். வைதீகத்துக்கு முந்திய பண்டைத் தமிழகம் சாதிப் பாகுபாடற்ற சமூகமாக இருந்ததை எடுத்துக்காட்டிய அவர்கள்,இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மக்களை அணிதிரட்டினர்.
திராவிட இயக்கம் வருணாசிரமத்தையும், அதற்குப் பின்புலமாக உள்ள இந்து மதத்தையும் எதிர்க்கத் துணிந்தது. கடவுள் பெயரைச் சொல்லித்தானே இந்தப் பார்ப்பான் சமூகக் கலாச்சாரத் துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறான். ஆக கடவுள் மறுப்பையும், நாத்திகத்தையும் இங்கே பேசியாக வேண்டியிருக்கிறது என்றும் அது கருதியது.
பிராமணீயம், வருணாசிரமம், சாதீயம் இவற்றைக் கட்டிக்காக்கும் இந்து மத கொள்கைகள் பிரதான எதிரிகள். மொழி, தேசம் ஆகியவற்றின் மீதான பற்றுக்கள் இந்த எதிர்ப்பைப் பலவீனப்படுத்திவிடும் என்றனர் . எல்லாப் பற்றுக்களும் அடிமைத்தனதிற்கே இட்டுச் செல்லும் என்றனர்.
திராவிடன் என்றால் அவன் மூடநம்பிக்கைக்கு விரோதி; ஆரிய தருமத்திற்கு விரோதி; நூற்றுக்கணக்கான சாதிகள் என்று சொல்லுகின்ற அந்த மனுதர்மத்திற்கு விரோதி; மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும், மானத்தோடு வாழ வேண்டும். இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவன் தான் திராவிடன் என்றனர்.
தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைய உரிமை இல்லை என்பதால் அவர்களுக்காக ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியவர்கள் இவர்கள் . ஆனால் அதில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் மனதில் கடவுளை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் கடவுள் அருள் தங்களுக்குக் கிடைக்க வழியில்லையே என்ற கலக்கமும் இருப்பதை உணர்ந்தனர். அவர்களை மனத்தளவில் தளர்விலிருந்து மீட்க அவர் செய்த உளவியல் சிகிட்சையே கடவுள் மறுப்புப் போராட்டம்.மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பது அவ்வை சொன்னது. கடவுளின் வாசல் திறக்கவில்லையா. கடவுளே இல்லை என்று சொல். இல்லாத கடவுளிடத்தில் நீ ஏன் போகிறாய். உன்னையே நீ நம்பு என்பது அவர் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த உளவியல் பாடம்.இந்தப்பாடம் சரியாக சென்று சேர, சேர்ப்பிக்க ஒரு இளைஞர்படையை இந்த நம்பிக்கையோடு அவர் தயார் செய்ய வேண்டியிருந்தது. அதுதான் திராவிட இயக்கம்.
திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை வணங்குவதற்கு திராவிடர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.ஆனால் கடவுள் பெயரால் சொல்லி இழைக்கப்படும் சாதி கொடுமைகளுக்கு இவர்கள் எதிரி.கடவுள் பெயர் சொல்லி அநீதி இழிகப்படுவதால் கடவுளையே எதிக்கின்றனர்.
திராவிடர்கள் ஏன் இந்து மதத்தையே குறை கூறுகிறார்கள் என்பது வழக்கமாக முன்வைக்கப்படும் இன்னொரு கேள்வி. ஏனென்றால் அவர்களும் அதே கடவுள்களை வணங்குபவர்கள் தான். தன் வீட்டை சுத்தம் செய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அழுக்காக இருக்கும் தன்வீட்டை சுத்தம் செய்ய வேண்டிய கடமையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் இந்து மத பிரச்சினைகளை திராவிடர்கள் அலசுகிறார்கள். ஏன்பிற மத பிரச்சினைகளை பேசுவதில்லை என்பதற்கும் இதுவே பதில். அடுத்தவன் வீட்டை சுத்தம் செய்ய அவன் அழைக்காமல் நாமாகப் போக முடியுமா?
ஆரிய ஆதிக்கம்
பண்பாடுள்ள மக்களைக் காட்டு மிராண்டிகள் வெற்றி கொள்வது இயல்புதான். திராவிடர்கள் ஆரியர்களிடம் வீழ்ந்ததற்கு இதுதான் காரணம் என்கிறார்கள் நேருவும், ராகுல சாங்கிருத்தியாயனும். வெற்றிதான் முக்கியம்; வழிமுறைபற்றிக் கவலைப் படவேண்டாம் என்றுதான் சாணக்கியனிலிருந்து சோவானவர்கள் வரை - அக்கிரகாரத்து அறிவாளிகள் கூட்டம் - உபதேசிக்கின்றன.
ஆரிய இதிகாச, புராண, இலக்கியக் கொள்கை கூட தர்மயுத்தம் குறித்தோ, யுத்த தர்மம் குறித்தோ கரிசனம் கொள்வதில்லை. நாங்கள் போர் தொடுக்கப் போகிறோம்; ஆதலால் உங்கள் நாட்டிலுள்ள கால் நடைகள், (ஆவினங்கள்) அவற்றைப் போன்றே சாது வான (!) பார்ப்பன மாக்கள், பெண்டிர், பிணியுடையோர், கர்ப்பிணிகள் போன்றவர்களைப் பாதுகாப்பான இடங்களில் பத்திரப்படுத் துங்கள் (புறம்) என்று பகை நாட்டரசுக்கு ஓலை அனுப்புவதும், பகைவரின் மரணத்தைக் கூட கண்ணீரால் கௌர விப்பதும் திராவிட - தமிழினப் பண்பாடாகும்.
வானாளாவிய கோபுரங்கள் உடைய நமது கோவில்களைக் கட்டுவதற்கு கோவிலுக்கு உரிமை கொண்டாடும் இவர்கள் (பார்ப்பனன் ) ஒரு செங்கல்லைக் கூட சுமந்து செல்லவில்லை. கட்டுமான பூஜை போட்டு பொற்காசுகள் மட்டும் பார்த்திருக்கிறார்கள். கோவில்களில் உள்ள ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு தூணும் நம் முன்னோர்களின் செல்வத்திலும், உழைப்பிலும், வியர்வையிலும், இரத்தத்திலும் உருவானவை. அதில் உள்ள சிலைகள் எல்லாமே உழைக்கும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்டவை. இவற்றிற்காக தன் சுண்டுவிரலைக் கூட அசைக்காத பார்ப்பனன் அங்கு உட்கார்ந்து கொண்டு உரிமை பேசுகிறான். யார் யார் கோவிலுக்கு வரலாம், யார் யார் பூஜை செய்யலாம் என்று பட்டியல் இட்டு காட்டுகிறான். பார்ப்பன புரட்டுக்களை அறிந்து கொண்ட இந்த காலத்திலும் 'சொல்லுங்க சாமி'ன்னு நாமும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.கோயிலைக் கட்டுவது தமிழ் அரசர், அதனைச் செய்து முடிப்பது சூத்திரர். ஆனால், அங்கு தமிழுக்கு இடமில்லை, சமஸ்கிருதமே இடம்பெற்றது.
திராவிடன் ஆரிய ஆதிக்கத்தில் இருந்து மீண்டு தனித்தன்மை பெறுவதை சுயராஜ்யம் என்கிறான். ஆரியன் திராவிடரை அடக்கி அழுத்தி வைப்பதை, மனு ஆட்சி புரிவதை சுயராஜ்யம், தர்மராஜ்யம், ராமராஜ்யம் என்கின்றான்.
திராவிட இயக்கம் ஒரு இலட்சியத்துக்காக உருவானது. திராவிட முன்னேற்றக்கழகமோ அரசியல் ஆதாயத்துக்காகவே உருவானது. எனவே இரண்டையும் குழப்பிக்கொள்ள தேவையில்லை.
நம் நாட்டில் திராவிட மக்களுக்குள்ளாகவே திராவிடர் ஆதித் திராவிடர் என்கின்ற ஒரு பிரிவு இருக்கிறது என்பதோடு ஆதித்திராவிட சமூகம் மிகப்பெரிய எண்ணிக்கை கொண்ட சமூகமாக இருந்து வருகிறது. திராவிட நாட்டில் எப்படி வெளியிலிருந்து வந்த ஆரியர்களுக்குத் திராவிட மக்கள் தீண்டப்படாதவர்களாயிருக்கிறார்களோ, அப்படி திராவிடர்களுக்கு ஆதித் திராவிடர்கள் அதைவிட மேம்பட்ட தீண்டப்படாதவர்களாயிருக்கிறார்கள். இந்நிலைமை திராவிட சமுதாயத்திற்கே ஒரு பெரும் மானக்கேடான நிலைமையாகும் என்பதோடும், திராவிடர்களை ஆரியர்கள் தீண்டப்படாத மக்களேன்று வகுத்திருப்பதையும் நடத்துவதையும் அரண் செய்கிறது. ஆகையால் ஆதித்திராவிடர் என்கின்ற பெயரே மாற்றப்பட்டு, இருவரும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்கின்ற பெயராலேயே வழங்கப்பட வேண்டுமென்பதும் திராவிடர்களுக்கு ஆதித்திராவிடருக்கும் சமுதாயத் துறையிலுள்ள எல்லா வித்தியாசங்களும், பேதங்களும் ஒழிந்து ஒரே சமூகமாக ஆகவேண்டும் என்பதும் எமது ஆசையும் திராவிட இயக்கத்தின் ஆசையும் கூட .
திராவிட கழக பேச்சுகளிலிருந்தும், எழுத்துகளிளிருந்தும் தொகுத்து தரப்பட்டுள்ளது
3 comments:
are you thinking batticaloa people are not thiravidar
புளியந்தீவு என்று அழைக்கப்பட்ட மட்டகளப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களும் திராவிடர்களே.எமது கட்டுரையில் வடக்கு என்பதற்கு பதிலாக வடகிழக்கு என்று குறுப்பிட்டு இருக்க வேண்டும்.தவற்றுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.எமது வரைபடத்தில் சிகப்பு நிறம் மட்டகளப்பு பகுதியை உள்ளடக்கியதே ஆகும் .
ஆர்யர்களான காட்டு மிராண்டிகள் திராவிடர்களை வீழ்த்தினர் என்பது ஆதாரத்துடன் மறுக்கபட்டது.
அக்கதைபடி ஆர்யர்கள்தான் திராவிடர்களை வீழ்த்தி, பிறகு வேதம் எழுதிதானர்கள். அப்பொழுது வேதம் எழுதியது காட்டு மிரண்டிகளா?
காட்டு மிராண்டிகள் வேதம் எழுதும் அளவுக்கு அறிவு உள்ளவர்களா?
நன்றாக சிந்தியுங்கள். வேதம் எழுதுவதற்கு சாதாரண மக்களுக்கு உள்ள
அறிவை விட அதிகம் வேண்டும்.
ராம்குமார்
Post a Comment