அன்பின்
உருவே 
அருளின்
தருவே 
அழகின்
வடிவே 
அலைகடல்
முத்தே !!
திங்களின்
கனிவே 
தித்திக்கும்
சுனையே 
தீஞ்சுவை
கனியே 
தென்பாண்டி
தமிழே !!
நினைவோடை  சிந்தும் நீர்த்திவலைகளின் 
ஈரம்
நீடித்திருப்பதில்லை
காலச்
சூரியனின் கதிரொளிகளில் கரைந்துவிடுகின்றன..
மாறாக உன் அன்பு தோய்ந்த விழிவீச்சில்
மாறாக உன் அன்பு தோய்ந்த விழிவீச்சில்
காயம்பட்ட
என் இதயம் ஈரத்தை சொட்டிக் கொண்டேயிருக்கிறது …!!
உன்னை
ஆசை தீர காதலிக்கிறேன்
அதில்
மருகி உருகிப் போகிறேன்...
நீ கிடைப்பாயா
மாட்டாயா... 
அதுபற்றி
கவலையில்லை...
என்
காவியங்களின் நாயகி நீ ... 
என்
கனவுகளுக்கும் நீயே ராணி...
என்
எண்ணங்களின் வார்ப்புகளில் 
எப்பொழுதும்
உன் பிரதி இருக்கும்.....
கரையை
முத்தமிடும் அலைபோல் 
என்
எண்ணங்கள்   உன்னை முத்தமிட்டு கொன்டே இருக்கும்
இறுதி வரை....
1 comment:
அருமையான தமிழ்
Post a Comment