ஒரு சிற்றூர். அங்கே ஒரு கண்ணி. அக்கண்ணி மீது காளை  ஒருவன் மையல் கொண்டிருக்கிறான். அவளை சிறுவயது முதலே  அவனுக்குத் தெரியும்.  அவளிடம் தன் காதலை எப்படியும்  தெரியப்படுத்தி விட வேண்டும்  என்று முனைகிறான். அந்த  கட்டுக்கடங்காத காளை செய்த செயல்களை தன் தோழியிடம் அக்கண்ணி  இவ்வாறு கூறுகிறாள்.
நாம் சிறுவயதில் தெருவில் மணல் வீடு  கட்டி விளையாடும் போது அதை சிதைப்பானல்லவா ஒருவன்.கூந்தலில்  உள்ள முல்லை மலரை பிய்த்து அழ விட்டானே அவன். நாம் விளையாடிக்  கொண்டிருந்த பந்தை பறித்துக் கொண்டு ஓடி நம்மை கதற விட்டானே..  அக்கள்வன் நேற்று நானும் என் தாயும் இருக்கும்பொழுது வீட்டிற்கு  வந்தான். "தாகமாக இருக்கிறது...தாகம் தணிக்க
கொஞ்சம் தண்ணீர்  தாருங்கள்" என்று கேட்டான். என் அன்னையும் தண்ணீர்  தரும்படிக்  கூறிவிட்டு வீட்டின் உள்ளே சென்று விட்டாள்.
அப்போது திடீரென  அவன் என் கைப்பிடிக்க நான் மருண்டு குரலெடுத்தது கேட்டு அன்னை  அலறியடித்து ஓடி வந்துவிட்டாள். உடனே அவன் நடுங்கினான்.  எனக்கு  அவனை பார்க்க பாவமாக இருந்தது. உடனே "தண்ணீர் குடிக்கும்போது  அவருக்கு விக்கல் வந்ததுமா, அதான் உங்களைக்
கூப்பிட்டேன்" என்று  கூறி உண்மை நிலையை மறைத்து விட்டேன். என் அன்னையும் விக்கல நீக்க,  அக்கள்வனின் தலையையும் முதுகையும் தாய் பாசத்துடன் தடவி விட்டாள்.  அந்தச் சமயத்தில் அவன் கடைக்கண்ணால் "கொல்வான்" போல் நோக்கி நகைக்கூட்டம் செய்தான் (புன்னகை பூக்கின்றான்)
கடைக்கணால்  கொல்வான்போல் நோக்கி
நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்
என்ன  வரிகள்!!
No comments:
Post a Comment