"என் சுவாசக் காற்றே" என்ற படத்தில் வரும் "தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்" என்ற பாடலின் முதலில் வரும் ஐந்து வரிகள் அப்படியே ஒரு குறுந்தொகை(௨௭) பாடல். இதை எழுதியது வெள்ளிவீதியார் என்னும் சங்கப் பெண் புலவர். இதைவிட காமத்தை வெளிப்படுத்த வேறு வரிகள் கிடையாது என்றே நினைக்கிறேன்.
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதாவது
பசலை உணி இயற் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே
நல்ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதாவது
பசலை உணி இயற் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே
விளக்கம்: நல்ல பசுவின் இனிய பாலானது, அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல் கறக்கும் பாத்திரத்திலும் விழாமல் தரையில் சிந்தி வீணானது போல, தேமல் படர்ந்த என் பெண்குறியும் மாந்தளிர் நிற அழகும் எனக்கும் பயன்படவில்லை, என்னுடைய காதலனுக்கும் இன்பம் தரவில்லை. பசலை படர்ந்து வீணாகிக்கொண்டிருக்கிறது.
மாமைக் கவினே - மாந்தளிர் நிற அழகே. என்ன வரிகள் !!
அடுத்து காதலன் படத்தில் வரும் "இந்திரையோ இவள் சுந்தரியோ" எனத் தொடங்கும் ஒரு சின்னப் பாடல். இந்தப் பாடல் திரிகூடராசப்பக் கவிராயரால் திருக்குற்றாலக் குறவஞ்சி என்னும் நூலில் எழுதப்பட்டுள்ளது. இது மிகச் சிறந்த சிற்றிலக்கிய காவியம் என்று சிலாகிப்பவர்களும் உண்டு . இந்தப் பாடல் வசந்தவல்லி என்பவள் தெருவில் பந்தாடிக் கொண்டிருப்பதை வருணித்து எழுதியது. பாடல் இதோ
இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ
ரம்பையோ மோகினியோ - மன
முந்தியதோ விழி முந்தியதோ கர
முந்தியதோ வெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர்
சங்கணி வீதியிலே - மணிய
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி
பொற்பந்து கொண்டாடினாளே!
விளக்கம்: திருமகளோ! இரதியோ! அரம்பையோ! மோகினியோ! என்று, கண்டவர்கள் ஐய்யப்பட்டுக் கொண்டிருந்தனர்! இவள் பந்தாடும்போது, பந்து அடிக்க இவளின் மனம் முன் செல்கிறதா? இவள் கண்கள் தாம் முந்திச் செல்கின்றனவா? இவள் கைகள் முந்துகின்றனவா? எது முதலில் முன் செல்கிறது? என்று, வியக்குமளவுக்கு மூன்றாம் பிறையை அணிந்து தில்லையில் கூத்தாடியவர் வீற்றிருக்கும் குற்றால மாநகர் வீதியில் ஒய்யாரி வசந்த வல்லி பந்தாடினாள்.
இது எல்லாம் ஒரு சின்ன எடுத்துக் காட்டுதான். அதே நூலில் வரும் ஒரு சின்னப் பாடல் உங்கள் பார்வைக்காக
கல்லுப் பதித்த தங்கச் செல்லக் கடகமிட்ட செங்கையாள்-எங்கும்
கச்சுக் கிடக்கினும்தித் திச்சுக் கிடக்குமிரு கொங்கையாள்
ஒல்லுங் கருத்தர்மனக் கல்லுஞ் சுழிக்குமெழில் உந்தியாள்-மீதில்
ஒழுங்கு கொண்டுள்ளத்தை விழுங்கு சிறியரோம பந்தியாள்
துடிக்கு ளடங்கியொரு பிடிக்கு ளடங்குஞ்சின்ன இடையினாள்-காமத்
துட்ட னரண்மனைக்குக் கட்டுங் கதலிவாழைத் தொடையினாள்
அடுக்கு வன்னச்சேலை எடுத்து நெறிபிடித்த உடையினாள்-மட
அன்ன நடையிலொரு சின்ன நடைபயிலும் நடையினாள்.
வெடித்த கடலமுதை எடுத்து வடிவு செய்த மேனியாள் - ஒரு
வீமப் பாகம் பெற்ற காமப் பாலுக்கொத்த சீனியாள்
விளக்கம்: மணிகள் பதித்த தங்கத்தால் செய்த அழகிய வளையல்கள் அணிந்த சிவந்த கைகளை உடையவள். அடுத்த வரிகளை இரண்டு விதமாக கொள்ளலாம். கொங்கைகள் இரண்டுமே கச்சுக்குள் அடங்கி கிடந்தாலும் காண காண தித்திக்கும் (அல்லது) எவ்விடத்திலும் உப்பு கரித்தாலும் அவ்விடத்து மட்டும் தித்தித்து கிடக்கும் எனவும் உரைக்கலாம்.முனிவர்களின் மனமும் சுழலும்படியான அழகிய தொப்புள் சுழியினை உடையவள். அந்த உந்தி சுழிக்கும் மேலாகா ஆடவரின் உள்ளத்தை விழுங்கும் சிறிய ரோமப் பந்தியினை உடையவள். இதுக்கு மேல விளக்கம் சொன்ன வேற மாதிரி இருக்கும் அதனால இதோடு முடிச்சுக்குவோம்
No comments:
Post a Comment