Friday, March 14, 2014

களவு கொள்ளும் கவிக்கானகம் - 9

அனிச்சத்தின் மென்மை இவள்
அன்னத்தின் தன்மை இவள்
செங்காந்தளை மேவிய சிவப்பு இவள்
மரபுகளை மீறிய வார்ப்பு இவள்
வம்புக்குள் அடங்கா வனப்பு இவள்
வளிமண்டலத்தை மீறிய ஈர்ப்பு இவள்

தேர்ந்தெடுத்த வார்த்தைகளை கோர்த்து ஆகா! அற்புதம்!! என்று உற்சாகம் கொள்ளும் வேளையில், தழைகளை தழுவிய தென்றலொன்று முன்னிரவுப் பொழுதில் என் காதோரமாய் தந்த இந்தப் பாடல் என் கர்வம் கொன்று நித்திரை தின்று ஆசை எனும் ஆண்ட வெளியில் ஆர்ப்பரித்து அடங்கச் செய்கிறது.

இசையா! இன்பத் தமிழா!

தெரியவில்லை. கேட்டவுடன் கிறங்கடிக்கும் இதன் இனிமையை என்னவென்று சொல்வது !! ஆசைகளிலும் நிராசைகளிலும் தொலைந்துவிட்ட வாழ்க்கையின் கணங்களை இந்தச் சின்னஞ் சிறிய பாடல் மீட்டு பூமிப்பந்தை என் கண்ணின் கருவிழிக்குள் சுழலச் செய்கிறது. கற்பனையெனும் எல்லைகளற்ற கானக வீதிகளில் நான் காணமல் போகிறேன்....

பெண்களின் அழகை கம்பன் பாடியிருக்கான், இளங்கோ வர்ணித்திருக்கிறான்... முச்சங்கங்களில் அமர்ந்த எத்தனையோ புலவர்கள் பெண்களின் அங்கங்களை கவிதையாய் புனைந்திருக்கிறார்கள் பாடியிருக்கிறார்கள் போற்றியிருக்கிறார்கள். அழகிகளையும் பேரழகிகளையும் கண்டிருப்பார்கள் களித்திருப்பார்கள் கண்களால் பருகியதை கவிதையாய் வடித்திருப்பார்கள்.  ஆனால்

எச்சொல்லுக்குள்ளும் அடக்க முடியாத அத்துமீறல் இவள் அங்க அழகு !!
ஒரே வரி.... ஓராயிரம் சிந்தனைச் சிற்றலைகளை ஓயாது உள்ளத்தில் உரசச் செய்கிறது...

சங்கத்தில் பாடாத கவிதை  உன் அங்கத்தில் யார் தந்தது !!

பாடலில் என்னைக் கவர்ந்த வரிகள் ...




சங்கத்தில் பாடாத கவிதை
   உன் அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு
   என் முன்னே யார் வந்தது

கையென்றெ செங்காந்தழ் மலரை
    நீ சொன்னால் நான் நம்பவோ....
கால் என்றே செவ்வாழை இலைகளை
    நீ சொன்னால் நான் நம்பி விடவோ....


........

ஆடை ஏன் உன் மேனி அழகை
   ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
   காணட்டும் காணாத உறவில்
கை தொட்டு...
மெய் தொட்டு..
சாமத்திலே தூங்காத விழிகளில்
    சந்தித்தேன் என்னென்ன மயக்கம்



No comments: