Saturday, August 30, 2008

பண்டைய தமிழகத்தில் காமன் விழா


நேற்று தான் "தாம் தூம்" படம் பார்த்தேன் .இப்படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய பாடல் ஒன்று என்னை மிகவும் ரசிக்க வைத்து.

அகம் பாதி முகம் பாதி 
நகம் பாயும் சுகம் மீதி
மரித்தாலும் மறக்காது அழகே !

உன் உள்ளத்தில் உண்டான காதல் எண்ணத்தால் உருவான உன் அழகான முகமும், காதலால் கொண்ட மோகத்தால் நீ என்னை தழுவும்போது உன் நகம் தீண்டும் இன்பமும் நான் இறந்தாலும் என் இறந்து போன செல்களிளின் நினைவுகளில் இருந்து நீங்காது. என்ன ஒரு ஆழமான காதல் வரிகள் !!

உன் குழலோடு விளையாடும் 
காற்றாக உருமாறி
முந்தானைப் படியேறவா 
மூச்சோடு குடியேறவா
உன் இடையோடு நடமாடும் 
உடையாக நான் மாறி
எந்நாளும் சூடேறவா

இந்த பாடலை கேட்டவுடன் பண்டை காலத்தில் நடந்த காமன் விழா தான் நாபகம் வந்தது.அதை பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று எண்ணினேன்.

காமன் விழா என்பது பின்பனிக் காலம் முடிந்து இளவேனிற் பருவம் தொடங்குவதற்கு அறிகுறியாகப் பங்குனி மாதத்தின் இறுதியில் அல்லது சித்திரை மாதத் தொடக்கத்தில் வசந்த விழா என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்பட்டது .அந்நாள் தொடங்கி காவிரிப்பூம்  பட்டினத்தில் காதல் திருவிழா நடைபெற்று வந்துள்ளது.பொதியை மலையில் குடிகொண்டிருந்த தமிழ் முனிவன் அகத்தியன் சொல்லுகினங்க கடைச் சங்கக் கால அரசன் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் காதல் திருவிழாவை காமன் விழாவாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடினான் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன .

பின்பனிக் காலம் என்பது ஒரு பருவ காலம். தமிழர் ஓராண்டை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்தனர். அவற்றுள் ஒன்று .

புதிய சிந்தனை, புதிய எதிர்பார்ப்புடன் புது வருடம் பிறக்கும் இளவேனிற்காலம் (சித்திரை,வைகாசி ), விழாகோலம் பூணும் முதுவேனிற்காலம் (ஆனி,ஆடி), வயல்வெளிகளுக்கு மேகத்தாய் பாலூட்டும் கார்காலம் (ஆவணி, புரட்டாசி),ஐப்பசி மழையே கார்த்திகை விளக்கின் பனிஒளியே என பாடப்பெறும் கூதிர் காலம் (ஐப்பசி, கார்த்திகை) , குளிர் கூடி மயக்கும் மாலை பொழுதை அளிக்கும் முன்பனிக் காலம் (மார்கழி, தை), புல்வெளிகளில் வெள்ளிப் பனி படியும் பின்பனிக் காலம் (மாசி,பங்குனி).

மன்மதன் கோயில் இராசகிரியத்தின் புறநகரத்திலுள்ளதொரு சோலையில் இருந்தது. அதில், தலைவன் தலைவியர் கூடியிருப்பதற்காக மணவறைகள் இருந்ததாக பெருங்கதை என்ற நூல் கூறுகிறது.காதலர் திருவிழாவின் போதில் ஆண்கள் தங்கள் காதலியுடனேயிருந்து நீராடி மகிழ்ந்திருப்பர் என்பது பெறப்படுகிறது. அதுபோல பொருள் தேடி வேற்று நிலம் சென்ற வலவர் மீண்டு வந்து காதலியருடன் கூடியிருப்பர். அந்த நாளை எண்ணியே காதற்பெண்டிர் காத்திருப்பர் என்பது கலித்தொகையால் அறியலாம்

கலித்தொகையில் உள்ள ஒரு பாடலை பாருங்கள் ..
”பனையீன்ற மா ஊர்ந்து அவன் வரக் காமன் கணை இரப்பேன் கால்புல்லிக் கொண்டு”
தன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டவன் நெஞ்சில் காதல் அம்பினை ஏவுமாறு அதனால் அவன் மடலேறித் தன்னிடம் வரச்செய்யுமாறு காமதேவனின் கால்களைக் கட்டிக்கொண்டு கெஞ்சுவேன்” என ஒரு தலைவி புலம்புகிறாள்.

இதிலிருந்து என்ன தெரிய வருவது என்றால் காதலர் நாள் (VALENTINES DAY) தமிழகத்திலிருந்து சென்றதாகவே இருக்க வேண்டும்!

3 comments:

கணினி தேசம் said...

தமிழன் பற்றிய புதிய செய்திக்கு நன்றி.

பண்டைய தமிழன் இயற்கையை சார்ந்து வாழ்ந்தவன்.

தாங்கள் குறிப்பிட்ட ஆறு காலங்கள் மீண்டும் மீண்டும் அதே வரிசையில் வருவதை கணித்து "ஆண்டு" என்ற ஒன்றை கொணர்ந்தான்.

இளவேனில் கலாத்தின் துவக்கத்தையே புத்தாண்டாக கொண்டாடினான். அதாவது பொங்கல் விழாவே புத்தாண்டு விழா. ஆரியர்கள் காலுன்றிய பின் அவர்களின் விழாக்களான திபாவளி, சித்திரை திருநாள் போன்றவைகளை கொண்டாட ஆரம்பித்து விட்டான் தன் முகத்தை மறந்துவிட்டான்.

Unknown said...

indha vizhavirku matroru peyar "INDHIRAN VIZHA"

ஆதித்ய இளம்பிறையன் said...

குமார் மற்றும் அருணா உங்களது கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.